முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

4 மாத இடைவெளிக்குப் பின்னர் இந்தியா - சீனா இடையிலான 16-வது சுற்று பேச்சு துவக்கம்

ஞாயிற்றுக்கிழமை, 17 ஜூலை 2022      இந்தியா
India-China 2022 07-17

Source: provided

புதுடெல்லி : 4 மாத இடைவெளிக்குப் பின் இந்தியா மற்றும் சீனா இடையிலான ராணுவ அதிகாரிகள் மட்டத்திலான 16-வது சுற்று பேச்சுவார்த்தை நேற்று நடந்தது. 

கிழக்கு லடாக்கில் சீன ராணுவத்தின் அத்துமீறல் நடவடிக்கையால் இரு நாடுகளுக்கு இடையே மோதல் நீடித்து வருகிறது. இதற்கு தீர்வு காண்பதற்காக இரு நாட்டு ராணுவ அதிகாரிகள் மட்டத்தில் 15 சுற்று பேச்சுவார்த்தைகள் நடந்துள்ளன.

இதுவரை நடந்த பேச்சுவார்த்தைகளின் பலனாக எல்லையில் சில சர்ச்சைக்குரிய பகுதிகளில் இருந்து இருதரப்பும் படைகளை திரும்ப பெற்றன. எனினும் டெம்சோக், தேப்சாங் உள்ளிட்ட பகுதிகளில் படைகளை வாபஸ் பெற சீனா மறுத்து வருகிறது. 

இந்த நிலையில் இரு தரப்பு ராணுவ அதிகாரிகள் மட்டத்திலான 16-வது சுற்று பேச்சுவார்த்தை நேற்று நடைபெற்றது. இதில் இந்தியா தரப்பில் ராணுவ 14-வது படைப்பிரிவு கமாண்டர் லெப்டினென்ட் ஜெனரல் அனிந்தியா சென்குப்தா பங்கேற்றார்.  4 மாத இடைவெளிக்கு பின்பு இந்த பேச்சுவார்த்தை நடைபெற்றது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து