முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜி.எஸ்.டி. வரி உயர்வை கண்டித்து பாராளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சிகள் போராட்டம்

புதன்கிழமை, 20 ஜூலை 2022      இந்தியா
Parliament 2022-07-05

Source: provided

புதுடெல்லி : தயிர், பனீர் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களுக்கான ஜி.எஸ்.டி. ஜூலை 18 முதல் பூஜ்ஜியத்தில் இருந்து 5 சதவீதமாக உயர்த்தப்பட்டதை கண்டித்து நேற்று எதிர்க்கட்சிகள் பாராளுமன்ற வளாகத்தில் போராட்டம் நடத்தினர்.

மத்திய அரசு அரிசி, தயிர் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களுக்கும் ஜி.எஸ்.டி. விதித்து அறிவித்தது. தயிர், பனீர் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களுக்கான ஜி.எஸ்.டி. ஜூலை 18 முதல் பூஜ்ஜியத்தில் இருந்து 5 சதவீதமாக உயர்த்தப்பட்டது.

இதை கண்டித்து, பாராளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் கூட்டம் மூன்றாவது நாளாக நடைபெற்று வரும் நிலையில், எதிர்க்கட்சிகள் பாராளுமன்ற இரு அவைகளிலும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். 

இந்நிலையில் பணவீக்கம் மற்றும் அன்றாடப் பயன்பாட்டுப் பொருட்கள் மீதான சரக்கு மற்றும் சேவை வரி உயர்வுக்கு எதிராக நேற்று பாராளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டன. தயிர், ரொட்டி, பனீர் போன்ற பொருட்களின் மீதான ஜி.எஸ்.டி. உயர்வை திரும்பப் பெறக்கோரி, காங்கிரஸ், என்சிபி, திமுக, இடதுசாரி உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர்.

பாராளுமன்ற வளாகத்தில் உள்ள மகாத்மா காந்தி சிலை முன்பு நடைபெற்ற போராட்டத்தில் காங்கிரஸ் தலைவர்கள் ராகுல் காந்தி, மல்லிகார்ஜூன் கார்கே, ஆதிர் ரஞ்சன் சவுத்ரி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து