முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நான் மகிந்தா ராஜபக்சவின் நண்பனா ? இலங்கை புதிய அதிபர் ரணில் மறுப்பு

வியாழக்கிழமை, 21 ஜூலை 2022      இந்தியா
ranil-----------2022-07-21

Source: provided

கொழும்பு:  “நான் ராஜபக்சவின் நண்பன் அல்ல; நான் இலங்கை மக்களின் நண்பன்” என்று இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கே தெரிவித்துள்ளார்.

பல்வேறு நெருக்கடிகளுக்கு மத்தியில் இலங்கை நாடாளுமன்றத்தில் நடந்த ரகசிய வாக்கெடுப்பில், அந்நாட்டின் 8-வது அதிபராக ரணில் விக்ரமசிங்கே புதன்கிழமை தேர்ந்தெடுக்கப்பட்டார். அதிபர் பதவியேற்ற பிறகு, இலங்கையில் உள்ள பழமையான புத்த ஆலயமான கங்காராம் கோயிலுக்கு ரணில் சென்றார்.

அங்கு ரணில் விக்ரமசிங்கே நாட்டு மக்களிடம் பேசியது: “நான் ராஜபக்சவின் நண்பன் நல்ல. நான் எப்படி ராஜபக்சவின் நண்பனாக இருக்க முடியும். நான் எல்லா காலங்களிலும் அவர்களை எதிர்த்தேன். நான் இதற்கு முன்னர், இலங்கை முன்னாள் அதிபர் சந்திரிகா குமாரதுங்கவுடன் பணியாற்றியுள்ளேன். அவர் வேறு கட்சி, நான் வேறு கட்சி. வேறொரு கட்சியைச் சேர்ந்த ஒரு தலைவருடன் பணியாற்றுவதற்காக நான் அவருடைய நண்பன் என்று அர்த்தமல்ல. நான் இலங்கை மக்களின் நண்பன். மக்கள் விரும்பும், நாட்டிற்கு தேவையான அனைத்து மாற்றத்தையும் கொண்டு வருவேன்” என்றார்.

இலங்கை நாடாளுமன்றத்தில் நேற்று முன்தினம் நடைபெற்ற ரகசிய வாக்கெடுப்பில் புதிய அதிபராக ரணில் விக்ரமசிங்கே (73) தேர்வு செய்யப்பட்டார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து