முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சூரியா பாராட்டிய சாய் பல்லவி

திங்கட்கிழமை, 25 ஜூலை 2022      சினிமா
Sai-Pallavi 2022 07 25

Source: provided

நடிகை சாய் பல்லவியின் நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் கார்கி. தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் வெளியான இந்தப் படத்திற்கு ரசிகர்களிடையே சிறப்பான வரவேற்பு காணப்படுகிறது. படத்திற்கு அதிகமான புரமோஷன்கள் எதுவும் செய்ய செய்யப்படாத நிலையில், தமிழகத்தில் இந்தப் படத்தை சூர்யாவின் 2டி என்டர்டெயின்மெண்ட் நிறுவனம் வெளியிட்டது. இந்தப் படத்தில் லீட் கதாபாத்திரத்தில் நடித்துள்ள சாய் பல்லவி படத்திற்கு மிகச்சிறந்த அர்ப்பனிப்பைக் கொடுத்திருந்தார். படத்தின் இயக்குநர் கௌதம் ராமசந்திரன், ஒவ்வொரு கேரக்டருக்கும் முக்கியத்துவம் தந்து திரைக்கதையை அமைத்ததிருந்தார். இந்நிலையில் இப்படத்தின் சக்சஸ் மீட் சமீபத்தில் நடைபெற்றது. அதில் பேசிய சாய் பல்லவி, நடிகர் சூர்யாவால் தான் கார்கி படத்துக்கு பத்து மடங்கு சிறந்த விமர்சனங்கள் கிடத்தது என அவரை பாராட்டி பேசினார்..

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony
View all comments

வாசகர் கருத்து