முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ரஷ்ய அதிபர் புடினின் ரகசிய காதலி மீது பொருளாதார தடை விதித்த அமெரிக்கா

புதன்கிழமை, 3 ஆகஸ்ட் 2022      உலகம்
Putin 2022-08-03

Source: provided

வாஷிங்டன் : ரஷ்ய அதிபர் புடினின் ரகசிய காதலியின் மீது பொருளாதார தடைகளை அமெரிக்கா விதித்துள்ளது. 

ரஷ்ய அதிபர் புடினின் ரகசிய காதலியாக அறியப்படுபவர் அலினா கபெவா. ஜிம்னாஸ்டிக்ஸ் வீராங்கனையான அலினா ஒலிம்பிக்கில் பதக்கம் வென்றுள்ளார். அதே வேளை, ரஷ்யாவின் அரசு செய்தி நிறுவனமான ஆர்.டி (ரஷியா டுடே)-யின் இயக்குனராகவும் அலினா செயல்பட்டு வருகிறார். 

இதனிடையே, உக்ரைன் மீது போர் தொடுத்துள்ள ரஷ்யா மீது அமெரிக்கா, மேற்கத்திய நாடுகள் பல்வேறு பொருளாதார தடைகளை விதித்து வருகின்றன.

இந்நிலையில், ரஷ்ய அதிபர் புடினின் ரகசிய காதலியாக அறியப்படும் அலினா கபெவா மீது அமெரிக்கா பல்வேறு பொருளாதார தடைகளை விதித்துள்ளது. கபெவா பாஸ்போர்ட்டை அமெரிக்கா முடக்கியுள்ளது. மேலும், அவரின் சொத்துக்களையும் முடக்குவதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து