முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நான்சி பெலோசியின் பயணம் எதிரொலி: தைவான் மீது வர்த்தக தடைகளை விதித்த சீனா

புதன்கிழமை, 3 ஆகஸ்ட் 2022      உலகம்
China 2022-08-03

Source: provided

தைபே : அமெரிக்க நாடாளுமன்ற சபாநாயகர் நான்சி பெலோசியின் பயணம் ஒரே சீனா என்ற கொள்கையை மீறிய செயல் என்று விமர்சித்து இருக்கும் சீனா, தைவான் மீது வர்த்தக தடைகளை விதித்துள்ளது.

ரொட்டிகள், வேக வைத்த பொருட்கள், இனிப்புகள் உள்ளிட்ட உற்பத்தி நிறுவனங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனை தைவான் வேளாண் கவுன்சில் உறுதிப்படுத்தி உள்ளது. 

இதன்படி தேயிலை பொருட்கள், உலர் பழங்கள், தேன், காய்கறி மற்றும் மீன்களையும் கறுப்புப் பட்டியலில் சீனா சேர்த்துள்ளது. பதிவு செய்யப்பட்ட 107 தைவான் நிறுவன பொருட்கள் கறுப்புப் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன. இதே போன்று 35 நிறுவனங்களின் இறக்குமதி உரிமைத்தை சீனா தற்காலிமாக நிறுத்தியுள்ளது. 

மேலும் தைவானை சுற்றி நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் போர் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது. சீனாவின் 21 போர் விமானங்கள் தைவான் எல்லையை சுற்றி வருகின்றன. தைவான் எல்லையில் சீனா நிறுத்தியுள்ள போர் கப்பல்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

ஆயுதங்களை சுமந்தபடி சீனாவின் கனரக வாகனங்கள் எல்லையை நோக்கி படையெடுத்துள்ளன. அமெரிக்கா மற்றும் தைவான் அதிகாரிகளுடன் அபாயகரமான நகர்வுகளுக்கு பதில் அளிக்கும் விதமாக ராணுவ நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக சீனா தெரிவித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து