முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அல் கொய்தா இயக்க தலைவர் கொலை: அதிபர் பைடனுக்கு ஒபாமா பாராட்டு

புதன்கிழமை, 3 ஆகஸ்ட் 2022      உலகம்
Obama 2022-08-03

Source: provided

வாஷிங்டன் : அல்-கொய்தா இயக்க தலைவன் ஒசாமா பின்லேடனோடு நெருங்கிய தொடர்புடையவர் அய்மான் அல்-ஜவாரி. அவரை அதிமுக்கிய பயங்கரவாதிகள் பட்டியலில் இணைத்திருந்த அமெரிக்க அரசு, கடந்த 2011-ம் ஆண்டிலிருந்து தேடி வந்தது.

இதற்கிடையே, ஆப்கானிஸ்தானில் சி.ஐ.ஏ. ஆளில்லா விமானம் நடத்திய தாக்குதலில் அல்-கொய்தா பயங்கரவாத இயக்க தலைவர் அய்மான் அல்-ஜவாரி கொல்லப்பட்டார் என அமெரிக்க அதிபர் ஜோபைடன் நேற்று முன்தினம் அறிவித்தார். 

இந்நிலையில், அய்மான் அல்-ஜவாஹிரி கொல்லப்பட்டதற்கு அமெரிக்காவின் முன்னாள் அதிபர் ஒபாமா வரவேற்றுள்ளார். இதுதொடர்பாக ஒபாமா வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், செப்டம்பர் 11 தாக்குதலுக்கு 20 ஆண்டுகளுக்கு பிறகு, அந்த பயங்கரவாத தாக்குதலின் மூளையாக செயல்பட்டவர்களில் ஒருவரும், அல்-கொய்தாவின் தலைவரான அய்மான் அல்-ஜவாரி இறுதியாக நீதியின் முன் நிறுத்தப்பட்டுள்ளார்.

அதிபர் பைடனின் தலைமைக்கு பாராட்டுக்கள். இந்த தருணத்திற்காக பல பத்தாண்டுகளாக உழைத்த உளவுத்துறை அதிகாரிகள் தங்களில் ஒருவருக்கு கூட சிறிய பாதிப்பும் இன்றி இதை நிகழ்த்திக் காட்டியுள்ளனர் என பதிவிட்டுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து