முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தேச துரோக வழக்கில் ரஷ்ய விஞ்ஞானி கைது புடினுக்கு நெருக்கமானவர்

ஞாயிற்றுக்கிழமை, 7 ஆகஸ்ட் 2022      உலகம்
Russian-scientist 2022-08-0

Source: provided

மாஸ்கோ ; ரகசியங்களை கசிய விட்டதாக புடினுக்கு நெருக்கமான ரஷ்ய விஞ்ஞானி தேசத்துரோக வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார்.  

ரஷ்யாவை சேர்ந்த நோவோசிபிர்ஸ்க் என்ற ஆராய்ச்சி நிறுவனம் அதி நவீன ஹைப்பர்சோனிக் ஏவுகணைகளை தயாரிப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. இதன் தலைவராக இருந்த ரஷ்ய விஞ்ஞானி ஆண்ட்ரே ஷிப்லியுக் மீது ஏவுகணை ரகசியங்களை கசிய விட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.

இதையடுத்து, தேசத் துரோக குற்றத்துக்காக அவர் கைது செய்யப்பட்டார். ரஷ்யாவின் ஹைப்பர்சோனிக் ஏவுகணை அமைப்புகளை உருவாக்குவதற்கான ஆராய்ச்சிகளை சமீப காலமாக இவர்தான் ஒருங்கிணைத்து வந்தார். இந்த ஆராய்ச்சி நிறுவனத்தில் ஏற்கனவே கடந்த மாதம் 2 விஞ்ஞானிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். ரஷ்யாவில் தேசத் துரோக சட்டத்தில் கைது செய்யப்படுபவர்களுக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்படும். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony
View all comments

வாசகர் கருத்து