முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பரூக் அப்துல்லாவுக்கு மீண்டும் கொரோனா தொற்று உறுதி

ஞாயிற்றுக்கிழமை, 14 ஆகஸ்ட் 2022      இந்தியா
Farooq-Abdullah 2022-08-14

Source: provided

ஜம்மு : ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லாவுக்கு மீண்டும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதல்வரும், தேசிய மாநாடு கட்சி தலைவருமான பரூக் அப்துல்லாவுக்கு கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பரூக் அப்துல்லா சில நாள் சிகிச்சைக்கு பின் வைரஸ் பாதிப்பில் இருந்து குணமடைந்து வீடு திரும்பினார். 

இந்நிலையில், 85 வயதான பரூக் அப்துல்லாவுக்கு 2-வது முறையாக மீண்டும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. பரூக் அப்துல்லாவுக்கு லேசான அறிகுறிகளுடன் கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளதாவும், வைரஸ் பாதிக்கப்பட்டுள்ள பரூக் அப்துல்லா வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டதாகவும் தேசிய மாநாட்டு கட்சி தெரிவித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து