முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மின்சார கொள்முதல் செய்ய தடை: மத்திய அரசு அறிவிப்பால் தமிழகத்திற்கு பாதிப்பில்லை : மின் வாரியம் விளக்கம்

வெள்ளிக்கிழமை, 19 ஆகஸ்ட் 2022      தமிழகம்
Pawer 2022-08-07

Source: provided

சென்னை : மின்சார உற்பத்தி நிறுவனங்களுக்கு ரூ.5,100 கோடி பாக்கி வைத்ததற்காக தமிழகம், மகராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்கள் மின்சாரம் வாங்குவதற்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது. இதனால், தமிழகத்தில் மின்விநியோகம் பாதிக்காது என மின்சார வாரியம் விளக்கமளித்துள்ளது.

மத்திய மின்சாரத்துறை அமைச்சகத்தின் கீழ் பவர் சிஸ்டம் ஆபரேசன் கார்பரேசன் செயல்படுகிறது.இதன் கீழ் செயல்படும் மின்சார உற்பத்தி நிறுவனங்கள் மூலம் மாநிலங்களில் உள்ள மின் விநியோக நிறுவனங்களுக்கு மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது. மின் உற்பத்தி நிறுவனங்களுக்கு தமிழகம், மகராஷ்டிரா, தெலுங்கானா, பீகார் உள்ளிட்ட மாநிலங்கள் ரூ. 5,100 கோடி பாக்கி வைத்துள்ளன.

தெலுங்கானா ரூ.1,380 கோடியும், தமிழகம் ரூ. 926.16 கோடியும் பாக்கி வைத்துள்ளது. மின்சார சட்ட திருத்தத்தின்படி குறிப்பிட்ட காலகெடுவுக்குள் கட்டணம் செலுத்த வேண்டும்.

ஆனால், காலக்கெடு முடிந்து விட்டதால், பாக்கி வைத்துள்ள மாநிலங்கள் மின்சாரம் வாங்கவும், விற்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. காற்றாலை மின்சார உற்பத்தி முடிவுக்கு வரும் நேரத்தில் இந்த தடை விதிக்கப்பட்டதால், மின்சார பற்றாக்குறை ஏற்படவும், மின்தடை ஏற்பட வாய்ப்பு உள்ளதாக அச்சம் ஏற்பட்டுள்ளது. 

இந்த நிலையில்  தமிழக மின்சார வாரியம் வெளியிட்ட அறிக்கையில்,  மத்திய அரசுக்கு செலுத்த வேண்டிய ரூ. 926 கோடியில் ரூ.700 கோடி செலுத்தப்பட்டு விட்டது. நிலுவ தொகை ரூ. 226 கோடி மட்டும் தான் செலுத்த வேண்டி உள்ளது.

மின் தேவைக்கு ஏற்ப தான் மின்சாரம் வாங்கப்படுகிறது. அக்டோபர் மாதம் வரை மின் தேவை பெரிய அளவில் உயர வாய்ப்பில்லை. மின் விநியோகம் பாதிக்கப்படாது எனக்கூறியுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து