முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சி.பி.ஐ. மூலம் எதிர்கட்சிகளை மத்திய அரசு முடக்குகிறது : கெஜ்ரிவால் குற்றச்சாட்டு

ஞாயிற்றுக்கிழமை, 21 ஆகஸ்ட் 2022      இந்தியா
Kejriwal 2022 08 21

Source: provided

புதுடெல்லி : சி.பி.ஐ. மற்றும் அமலாக்கத்துறை மூலம் எதிர்க்கட்சிகளை மத்திய அரசு முடக்குகிறது என்று டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் குற்றம் சாட்டியுள்ளார். 

துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவுக்கு எதிராக லுக் அவுட் நோட்டீசை சி.பி.ஐ. பிறப்பித்தற்கு டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் கண்டனம் தெரிவித்து உள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:- 

பணவீக்கம் காரணமாக நாடு முழுவதும் சாதாரண மக்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர். இளைஞர்கள் வேலையில்லாமல் திண்டாடும் இந்த நேரத்தில் மத்திய அரசு மாநில அரசுடன் இணைந்து பணவீக்கம் மற்றும் வேலையில்லா திண்டாட்டத்தை குறைக்க போராட வேண்டும்.

ஆனால் மத்திய அரசோ காலையில் எழுந்தவுடன் சி.பி.ஐ. மற்றும் அமலாக்கத்துறை மூலம் எதிர்க்கட்சிகளை முடக்குகிறது. இப்படிப்பட்ட நாடு எப்படி முன்னேறும். மணீஷ் சிசோடியாவுக்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பித்தது கண்டனத்துக்குரியது. இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து