முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இமாச்சலில் கனமழை எச்சரிக்கை : பல இடங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்

ஞாயிற்றுக்கிழமை, 21 ஆகஸ்ட் 2022      இந்தியா
Himachal 2022 08 21

Source: provided

காங்கரா : இமாச்சல் பிரதேசத்தில் ஒருவாரத்திற்கு கனமழை நீடிக்குமென தெரிவித்துள்ள வானிலை ஆய்வு மையம், பல இடங்களுக்கு சிவப்பு, மஞ்சள் மற்றும் ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும்  இமாச்சல பிரதேசத்தில் பெய்து வரும் தொடர் கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 22 ஆக உயர்ந்துள்ளது. 

இமாச்சலப்பிரதேசத்தில் தற்போது கனமழை தீவிரமடைந்துள்ள நிலையில், ஆறுகளில் வெள்ளப் பெருக்கும், ஆங்காங்கே நிலச்சரிவும் ஏற்பட்டு வருகிறது. கனமழை காரணமாக, காங்கரா மாவட்டத்தில் உள்ள சக்கி ஆற்றின் மேல் கட்டப்பட்டுள்ள ரயில்வே பாலம் உடைந்து விழுந்தது. கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவு, திடீர் வெள்ளம் காரணமாக ஒரே நாளில் 22 பேர் பலியாகினர். 9 பேர் படுகாயம் அடைந்துள்ள நிலையில், 6 பேர் காணாமல் போயுள்ளனர். 

கனமழையால் 742 சாலைகள் மற்றும் 172 நீர் வழங்கல் திட்டங்கள் சீர்குலைந்ததாகவும், அவற்றை சீரமைக்கும் பணிகள் நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில், இமாச்சல் பிரதேசத்தில் ஒருவாரத்திற்கு கனமழை நீடிக்குமென தெரிவித்துள்ள வானிலை ஆய்வு மையம், பல இடங்களுக்கு சிவப்பு, மஞ்சள் மற்றும் ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து