முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

விக்ரமின் கோப்ரா விமர்சனம்

சனிக்கிழமை, 3 செப்டம்பர் 2022      சினிமா
Vikram 2022 09 03

Source: provided

சியான் விக்ரம் ஸ்ரீநிதி ஷெட்டி ஆகியோர் நடிப்பில் தற்போது வெளியாகியுள்ள திரைப்படம் கோப்ரா. டிமான்டி காலனி, இமைக்கா நொடிகள் படங்களை இயக்கிய அஜய் ஞானமுத்து இந்த படத்தை இயக்கியுள்ளார். ஏ ஆர் ரகுமான் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.ஸ்காட்லாந்து நாட்டு இளவரசரை கொல்ல ஆப்பிரிக்கா பாதிரியார் தோற்றத்தில் அறிமுகமாகிறார் நாயகன் விக்ரம். அதன் பிறகு கணித முறையில் வித்தியாசமான தொடர் கொலைகளை செய்கிறார். அந்த கொலைகளை பற்றி விசாரிக்க சிபிஐ அதிகாரி இர்ஃபான் பதான் விசாரணையில் இறங்குகிறார். அப்போது அவருக்கு சில சுவாரஸ்யமான தகவல்கள் கிடைக்கின்றன. இறுதியில் விக்ரம் யார்? அவர் ஏன் தொடர் கொலைகளை செய்ய வேண்டும்? அவருக்கு பின்னணியில் இருப்பது யார்? போன்ற கேள்விகளுக்கு பதில் சொல்கிறது கோப்ரா திரைப்படம். விக்ரம் விதவிதமான தோற்றங்களில் முழு படத்திலும் தனது நடிப்பால் ரசிகர்களை கவர்கிறார். விக்ரமின் திறமையான நடிப்பு படத்திற்கு பெரிய பலமாக உள்ளது.குறிப்பாக போலீஸ் விசானை செய்யும் காட்சியில் விக்ரம், ஆனந்தராஜ் கூட்டணி நடிப்பு ரசிக்க வைக்கிறது.விக்ரம் – ஸ்ரீநிதி இடையேயான காதல் காட்சிகளுக்கு கொஞ்சம் அழுத்தம் கூட்டி இருக்கலாம். இன்டர்போல் அதிகாரியாக முன்னாள் கிரிக்கெட் வீரர் இர்பான் பதான், சிறப்பான அறிமுகம். ஆராய்ச்சி மாணவியாக மீனாட்சி கோவிந்தராஜன் அதிகக் காட்சிகளில் வருகிறார்.ஏ ஆர் ரகுமானின் பின்னணி இசை காட்சிகளுக்கு வலு சேர்த்து இருக்கிறது. மொத்தத்தில் விக்ரம் ரசிகர்களுக்கு ஒரு மெகா திரை விருந்து.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து