முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆஸ்திரேலிய விபத்தில் பஞ்சாப் பாடகர் பலி

சனிக்கிழமை, 3 செப்டம்பர் 2022      உலகம்
Nirvair-Singh 2022 09 03

ஆஸ்திரேலியாவில் நடந்த கார் விபத்தில், பிரபல பஞ்சாப் பாடகர் நிர்வைர் சிங் உயிரிழந்தார். 

பஞ்சாபை சேர்ந்தவர் பிரபல பாடகர் நிர்வைர் சிங். இவர் மை டர்ன் என்ற இசை ஆல்பத்தின், தேரா பினா பாடல் மூலமாக மக்களிடையே பிரபலமானார். இவர் 9 ஆண்டுகளுக்கு முன் ஆஸ்திரேலியா சென்று மெல்போர்னில் வசித்து வந்தார். 

இந்நிலையில், இவர் ஜீப்பில் சென்று கொண்டிருந்த போது வேகமாக வந்த கார் ஒன்று மோதியது. இதில் நிர்வைர் சிங் சம்பவ இடத்திலேயே பலியானார். விபத்தில் நிர்வைர் உயிரிழந்த சம்பவம் அவரது ரசிகர்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து