முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இன்று ஐதராபாத்தில் கடைசி டி-20 போட்டி: ஆஸி.யை வீழ்த்தி தொடரை வெல்லுமா இந்திய அணி? - மேலும் ஒரு உலக சாதனை படைக்க வாய்ப்பு

சனிக்கிழமை, 24 செப்டம்பர் 2022      விளையாட்டு
Hyderabad 2022--09-24

Source: provided

ஐதராபாத் : ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ஐதராபாத் நகரில் இன்று நடைபெறும் கடைசி மற்றும் 3-வது டி-20 போட்டியில் ஆஸி.யை வீழ்த்தி தொடரை வெல்லும் முனைப்பில் இந்திய அணி  உள்ளது. மேலும் இந்த போட்டியில் வெற்றிப்பெற்றால் சர்வதேச டி-20 கிரிக்கெட் போட்டியில் அதிக வெற்றிப்பெற்ற அணி என்ற புதிய உலக சாதனையை ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி படைக்கும்.\

ஓவர்கள் குறைப்பு...

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்றுள்ளது. மொகாலியில் நடந்த முதல் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தது. இரு அணிகளுக்கும் இடையே 2-வது டி20 போட்டி மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் நடைபெற்றது. கனமழை காரணமாக ஆடுகளம் ஈரப்பதமாக இருந்ததால் டாஸ் போடுவதில் தாமதம் ஏற்பட்டது. இதனால் போட்டி நீண்ட நேரம் பாதிக்கப்பட்டது. இறுதியாக 8 ஓவர்களாக போட்டி குறைக்கப்பட்டது. 

சமநிலையில்....

இதை தொடர்ந்து டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. முதலில் விளையாடிய ஆஸ்திரேலிய அணி 8 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 90 ரன் அடித்தது. பின்னர் 91 ரன் என்ற இலக்கை நோக்கி களம் இறங்கிய இந்திய அணியில் கே.எல்.ராகுல் 10 ரன்னுக்கு வெளியேறினார். சிறப்பாக விளைடியாக கேப்டன் ரோகித் சர்மா 46 ரன்கள் குவித்து களத்தில் இருந்தார்.7.2 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 92 ரன் குவித்த இந்திய அணி, 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் 3 போட்டிகள் கொண்ட இந்த தொடர் 1-1 என்ற சமன் நிலையில் உள்ளது.

டி20-யில் அதிக சிக்சர்கள்

ஆஸி.க்கு எதிரான 2-வது டி-20 போட்டியில் முதல் சிக்சர் அடித்ததன் மூலம் கேப்டன் ரோகித் சர்மா சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிக சிக்சர் அடித்த வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார். இந்த போட்டிக்கு முன்னதாக 172 சிக்சர்களுடன் நியூசிலாந்து வீரர் மார்ட்டின் கப்டில் உடன் முதல் இடத்தில் இருந்தார் ரோகித் சர்மா. இந்த நிலையில் அவரின் சாதனையை முறியடித்து சர்வதேச டி20களில் அதிக சிக்சர்கள் அடித்த வீரர் என்ற பெருமையை ரோகித் (176) பெற்றுள்ளார்.

சாதனை படைக்குமா இந்தியா?

இன்று ஐதராபாத் நகரில் நடைபெறும் 3-வது மற்றும் கடைசி டி-20 போட்டி வெற்றியாளரை தீர்மானிக்கும் போட்டி ஆகும். இதில் வெல்லும் பட்சத்தில் ஒரு காலண்டர் வருடத்தில் அதிக வெற்றிகளை பதிவு செய்த அணி என்ற உலக சாதனையை முழுமையாக தனதாக்கும் வாய்ப்பு இந்தியாவுக்கு கிடைத்துள்ளது. எனவே இன்றயை போட்டியில் சிறப்பாக செயல்பட்டு ஆஸ்திரேலியாவுக்கு தக்க பதிலடி கொடுத்து கோப்பையை வெல்வதுடன் இந்த உலக சாதனையை முழுமையாக இந்தியா தனதாக்குமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் ஏற்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து