முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பட்டாசு வெடிப்பதற்கான நேரம் குறித்து முடிவு: அமைச்சர்கள் தலைமையில் நாளை ஆலோசனை கூட்டம்

திங்கட்கிழமை, 26 செப்டம்பர் 2022      தமிழகம்
fireworks 2022--09-26

தீபாவளி பண்டிகை தொடர்பாக நாளை (28ம் தேதி) அமைச்சர்கள் தலைமையில் கூட்டம் நடைபெற உள்ளது. இதில் பட்டாசு வெடிப்பதற்கான நேரம் குறித்து முடிவு எடுக்கப்படும் என்று தெரிகிறது.

தீபாவளி பண்டிகை அடுத்த மாதம் 24-ந் தேதி கொண்டாடப்படுகிறது. தீபாவளி பண்டிகை கொண்டாட்டத்தின் போது பொதுமக்கள் பட்டாசுகள் வெடித்து மகிழ்ச்சியாக கொண்டடுவர். இந்நிலையில் கடந்த சில வருடங்களாக பட்டாசுகள் வெடிப்பதால் அதிக அளசு காற்று மாசுபாடு ஏற்படுவதாக கூறி பட்டாசுகள் வெடிப்பதற்கு பல்வேறு கட்டுப்பாடுகளை அரசு விதித்து வருகிறது.

இந்நிலையில் இந்த ஆண்டு தீபாவளி பண்டிகையின் போது பட்டாசு வெடிப்பதற்கான நேர கட்டுப்பாடுகள் குறித்து கட்டுப்பாடுகளை விதிக்க அமைச்சர்கள் தலைமையில் ஆலோசனை நடைபெற உள்ளது. இந்த ஆலோசனைக் கூட்டம் வரும் நாளை நடைபெறுகிறது. ஆலோசனைக் கூட்டம் வருவாய்த்துறை, தொழிலாளர் நலத்துறை அமைச்சர்கள் தலைமையில் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

மேலும், இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பட்டாசு வெடிப்பதற்கான நேர கட்டுப்பாடுகள், தடை செய்யப்பட்ட சீன பட்டாசு விற்பனையை கண்காணிப்பது உள்ளிட்டவை குறித்து ஆலோசனை செய்ய உள்ளதாக தெரிகிறது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பட்டாசு விற்பனை சங்கங்களின் பிரதிநிதிகள் பங்கேற்க உள்ளதாகவும் தெரிகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து