முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தலைமை கழகத்துக்கு திடீர் வருகை: அ.தி.மு.க. நிர்வாகிகளுடன் இ.பி.எஸ். அவசர ஆலோசனை

திங்கட்கிழமை, 26 செப்டம்பர் 2022      அரசியல்
EPS 2022--09-26

தலைமை கழகத்துக்கு நேற்று திடீரென வருகை தந்த எடப்பாடி பழனிசாமி  அ.தி.மு.க. நிர்வாகிகளுடன் அவசர ஆலோசனை நடத்தினார்.

அ.தி.மு.க.வுக்குள் எடப்பாடி பழனிசாமிக்கும், ஓ.பன்னீர் செல்வத்துக்கும் இடையே ஏற்பட்ட தலைமைப்பதவிக்கான போட்டியில் எடப்பாடி பழனிசாமி கையே ஓங்கியது. பொதுக்குழு கூட்டத்தை நடத்தி இடைக்கால பொதுச்செயலாளராகவும் தேர்வு செய்யப்பட்டார். இதை சென்னை ஐகோர்ட்டும் உறுதி செய்தது. அடுத்த கட்டமாக பொதுச்செயலாளரை தேர்வு செய்வதற்கான தேர்தலை நடத்த உள்ளனர். விரைவில் தேர்தலை நடத்தி எடப்பாடி பழனிசாமியை பொதுச்செயலாளராக தேர்வு செய்ய முடிவு செய்துள்ளனர்.

இந்த நிலையில் எடப்பாடி பழனிசாமி நேற்று திடீரென்று தலைமை கழகத்துக்கு வந்தார். இதுதொடர்பாக முக்கிய நிர்வாகிகள் மற்றும் மாவட்ட செயலாளர்களுக்கு நேற்று முன்தினம் மாலையில் அவசர அழைப்பு கொடுக்கப்பட்டது. இதனால் முக்கிய நிர்வாகிகள் அவசர அவசரமாக புறப்பட்டு நேற்று காலை சென்னை வந்தனர்.

காலை 10.30 மணியளவில் எடப்பாடி பழனிசாமி தலைமை கழகத்துக்கு வந்தார். அவரை கட்சி நிர்வாகிகள் உற்சாகமாக வரவேற்றார்கள். பின்னர் கூட்ட அரங்கில் நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். இந்த கூட்டத்தில் தேர்தல் அதிகாரிகளாக நியமிக்கப்பட்டுள்ள பொன்னையன், நத்தம் விசுவநாதன் மாவட்ட செயலாளர்கள் பாலகங்கா, விருகை. ரவி, ராஜேஷ், வெங்கடேஷ் பாபு, கே.பி.கந்தன், சிட்லபாக்கம் ராஜேந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்தில் பொதுச்செயலாளர் தேர்தலை நடத்தும் தேதி குறித்து விவாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. விரைவில் தேர்தல் தேதியை தேர்தல் அதிகாரிகள் அறிவிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக கட்சி அலுவலகம் உடைக்கப்பட்டதை சீரமைத்து இருந்ததை பார்வையிட்டார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து