முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

துப்பாக்கிமுனையில் கடத்தப்பட்ட இந்திய வம்சாவளி குடும்பத்தினர் கலிபோர்னியாவில் சடலமாக மீட்பு

வியாழக்கிழமை, 6 அக்டோபர் 2022      உலகம்
California 2022-10-06

Source: provided

வாஷிங்டன்: அமெரிக்காவில் துப்பாக்கி முனையில் கடத்தப்பட்ட 8 மாத குழந்தை உட்பட இந்திய வம்சாவளியை சேர்ந்த குடும்பத்தினர் கலிபோர்னியாவில் சடலமாக மீட்கப்பட்டது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். 

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தைச் சேர்ந்த இந்திய வம்சாவளி இளைஞர் ஜஸ்தீப் சிங். இவர், மனைவி ஜஸ்லீன் கவுர், மற்றும் 8 மாத பெண் குழந்தை ஆரூஹி தேரி, உறவினர் அமன்தீப் சிங் ஆகியோருடன் வசித்து வந்தார். கலிபோர்னியாவின் மெர்செட் கவுன்டி பகுதியில் உள்ள நெடுஞ்சாலையில் கடந்த திங்கட்கிழமை அன்று இவர்கள் 4 பேரும் கடத்தப்பட்டனர். இவர்களை கடத்தியது யார், எதற்காக கடத்தப்பட்டனர் என்ற விபரம் தெரியவில்லை. 

இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வந்த நிலையில் துப்பாக்கிமுனையில் கடத்தப்பட்ட 8 மாத குழந்தை உள்பட அமெரிக்க வாழ் இந்திய குடும்பம் நேற்று முன்தினம் கலிபோர்னியாவில் சடலமாக கண்டெடுக்கப்பட்டது. இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் குறித்து தீவிர விசரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து