முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வடகொரியா மீண்டும் ஏவுகணை சோதனை

வியாழக்கிழமை, 6 அக்டோபர் 2022      உலகம்
Vadakoriya 2022-10-06

Source: provided

சியோல்: வடகொரியா நேற்று அதிகாலை அணு ஆயுதத்தை சுமந்து செல்லும் வல்லமை கொண்ட பாலிஸ்டிக் ஏவுகணையை சோதனை செய்தது.

வட கொரியா கடந்த 5 ஆண்டுகளில் முதல் முறையாக ஜப்பான் மீது கடந்த செவ்வாய்க்கிழமை ஏவுகணையை ஏவியது. வடகொரியா பரிசோதித்த ஏவுகணை பசிபிக் பெருங்கடலில் விழுவதற்கு முன்பு ஜப்பான் எல்லைக்கு மேலே பறந்து சென்றது. இதை தொடர்ந்து ஜப்பான் அரசு நாட்டுமக்களை பாதுகாப்பாக இருக்குமாறு எச்சரித்தது. 

2017-ம் ஆண்டுக்குப் பிறகு ஜப்பானுக்கு மேல் பறந்த முதல் வட கொரிய ஏவுகணை இதுவாகும். இதற்கு பதிலடியாக அமெரிக்காவுடன் இணைந்து தென்கொரியா நேற்று ஏவுகணை சோதனை நடத்தியது. வடகொரியாவுக்கு பதிலடியாக இந்த சோதனையில் அமெரிக்க ராணுவம் தங்களுக்கு சொந்தமான 4 ஏவுகணைகளை ஏவி சோதனை நடத்தியது. அதே வேளை, தென்கொரிய ராணுவமும் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட 2 ஏவுகணைகளை ஏவி சோதனை நடத்தியது. 

இந்த நிலையில், வடகொரியா நேற்று அதிகாலை அணு ஆயுதத்தை சுமந்து செல்லும் வல்லமை கொண்ட பாலிஸ்டிக் ஏவுகணையை சோதனை செய்தது. வடகொரியாவில் இருந்து ஏவப்பட்ட அந்த ஏவுகணை ஜப்பான், தென்கொரியாவை நோக்கி கிழக்கு கடற்பகுதியில் வான்பரப்பை கடந்து சென்று பசுபிக் கடலில் விழுந்துள்ளது. இதனை தென்கொரிய கூட்டு ராணுவப் படை உறுதி செய்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து