முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஒரே நாடு, ஒரே உர திட்டம் துவக்கம்: விவசாய குடும்பங்களுக்கு ரூ.16,000 கோடி விடுவிப்பு: பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்

திங்கட்கிழமை, 17 அக்டோபர் 2022      இந்தியா
Modi 2022 09 08

ஒரே நாடு, ஒரே உர திட்டம் துவக்கி வைத்த பிரதமர் மோடி நாடு முழுவதும் விவசாய குடும்பங்களுக்கு ரூ. 16,000 கோடி நேரடி பணப் பரிவர்த்தனை மூலமான தொகையை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். 

மத்திய அரசின் வேளாண்மை அமைச்சகமும், ரசாயனம் மற்றும் உரத்துறை அமைச்சகமும் இணைந்து ‘பிரதமரின் விவசாய கவுரவ மாநாடு - 2022’ என்ற நிகழ்ச்சி நடந்தது. இந்த மாநாட்டில் பிரதமரின் கிசான் திட்டத்தின் கீழ் 12வது தவணையாக, ரூ. 16,000 கோடியை நேரடி பணப் பரிவர்த்தனையின் மூலம் மின்னணு முறையில் பிரதமர் மோடி விடுவித்தார். 

இத்திட்டத்தின் கீழ் தகுதி வாய்ந்த விவசாய குடும்பங்களுக்கு ஆண்டுக்கு ரூ. 6,000, மூன்று தவணையில் வழங்கப்படுகிறது. கடந்த 2019ல் தொடங்கப்பட்ட இத்திட்டத்தின் கீழ் இதுவரை ரூ. 2 லட்சம் கோடி வழங்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில் நேற்று நடந்த நிகழ்ச்சியில் ‘ஒரே நாடு, ஒரே உர திட்ட’த்தையும் பிரதமர் தொடங்கி வைத்தார். பாரத் என்ற ஒரே பெயரில் உரங்களை சந்தைப்படுத்துவதற்கு வசதியாக பாரத் யூரியா, பாரத் டிஏபி, பாரத் எம்ஓபி ஆகிய உர பைகளையும் இந்த திட்டத்தின் கீழ் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்நிகழ்ச்சியில் மத்திய  வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலத்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர், ஒன்றிய ரசாயன உரத்துறை அமைச்சர் பகவந்த் குபா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

பின்னர் அவர் பிரதமர் மோடி பேசியதாவது: பிரதம மந்திரி கிசான் விவசாயிகளுக்கான ஒரு மாற்றும் முயற்சியாகும். இன்றைய நிகழ்வானது விவசாயிகள், வேளாண் தொடக்க நிறுவனங்கள் மற்றும் பங்குதாரர்களை ஒரே தளத்தில் ஒன்றிணைத்துள்ளது.

விவசாயிகளுக்கு அறுவடையை அதிகரிக்கவும், மண்ணின் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும், விவசாய மகசூலை  மேம்படுத்துவதற்கு எளிதாகப் பயன்படுத்தக்கூடிய தொழில்நுட்பத்தை உருவாக்கவும் நாட்டில் உள்ள வேளாண் தொடக்க நிறுவனங்கள் செயல்படுகின்றன. தொழில்நுட்பம் சார்ந்த நவீன விவசாய உத்திகளைக் கடைப்பிடிப்பது காலத்தின் தேவை என்று மோடி கூறினார். 

மேலும், 22 கோடிக்கும் அதிகமான மண்வள அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன, இதனால் விவசாயிகள் தங்கள் நிலம் மற்றும் அறுவடை பற்றிய தகவல்களை தயார் நிலையில் வைத்திருக்க முடியும்.

வெளிநாட்டு இறக்குமதியைச் சார்ந்திருப்பதைக் குறைக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்திய மோடி, உயிரி எரிபொருள் எத்தனாலுக்கு ஊக்கம் அளிக்கப்பட்டுள்ளது. விவசாயிகளின் எத்தனால் உற்பத்தியானது நிலையான வாகன எரிபொருளின் வளர்ச்சிக்கு வழிவகுக்கும். விவசாயத் துறையில் சிறந்த தொழில்நுட்பம் மற்றும் கண்டுபிடிப்புகளை வழங்குவதற்கு அரசாங்கம் அர்ப்பணிப்புடன் இருப்பதாக மோடி கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து