முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காந்தாரா விமர்சனம்

திங்கட்கிழமை, 17 அக்டோபர் 2022      சினிமா
Gandhara-Review 2022--10-17

Source: provided

மன்னராட்சிக் காலத்தில் மக்களுக்குத் தானமாகக் கொடுக்கப்பட்ட நூறு ஏக்கர் நிலத்தை அந்த மன்னரின் வாரிசுகள் திரும்பப் பெற முயல அதற்கு எதிராக அம்மக்கள் போராடுகிறார்கள். அதேநேரம் அவர்களுக்கு எதிராக அரசும் வனத்துறையும் களமிறங்குகிறது. முடிவில் என்னவானது என்பதை கர்நாடக எல்லையோர வனப்பகுதி கிராமமொன்றில் நடக்கும் சிறுதெய்வ வழிபாட்டை மையமாக வைத்துச் சொல்லப்பட்டிருக்கும் படம் காந்தாரா. எழுதி இயக்கியிருப்பதோடு நாயகனாகவும் நடித்திருக்கிறார்  ரிஷப் ஷெட்டி. தொடக்கத்தில், மதுக்குடித்து வனத்தில் பன்றிகளை வேட்டையாடி  சுற்றித் திரியும் நாயகன், நிலத்தைக் காப்பாற்றும் போராட்டத்தில் விஸ்வரூபமெடுத்து மிரளவைத்திருக்கிறார். சாமி அவர் மேல் ஏறியதும் ஓவ் ஓவ் என ஓங்காரமிட்டுக் கொண்டே அவர் ஆடும் சன்னதம் அபாரம். நாயகியாக  சப்தமி கவுடா நடித்திருக்கிறார். நாயகன் ரிஷப்ஷெட்டி அவரைச் சீண்டும் காட்சிகள் சுவாரசியம். வனத்துறை அதிகாரியாக நடித்திருக்கிறார் கிஷோர். மன்னரின் வாரிசாக நடித்திருக்கும்  அச்யுத்குமார் அமைதியாக நடித்து அசத்தியிருக்கிறார். பி.அஜனீஷ் லோக்நாத் இசையில் பாடல்கள் கேட்கலாம். இறுதியில் அரசாங்கத்தின் வனத்துறை இயற்கையைப் பாதுகாக்கும் என்று சொல்லியிருப்பது முரணாக உள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து