முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழ் திரைப்படம் தயாரிக்கும் தோனி

புதன்கிழமை, 26 அக்டோபர் 2022      சினிமா
Dhoni-2022-10-26

இந்திய நட்சத்திர கிரிக்கெட் வீர்ர் மகேந்திரா சிங் தோனியும், அவரது மனைவி திருமதி சாக்ஷியும் இணைந்து ‘தோனி என்டர்டெயின்மெண்ட்’ என்ற பட நிறுவனத்தை தொடங்கி, தமிழில் திரைப்படம் ஒன்றை தயாரிக்கின்றனர்.. இந்நிறுவனம் அனைத்து மொழிகளிலும் பொழுதுபோக்கு அம்சம் உள்ள திரைப்படங்களை தயாரிப்பதற்காக களம் இறங்கி இருக்கிறது. இதற்கான பல கட்ட தயாரிப்பிலும் ஈடுபட்டிருக்கிறது. ஏற்கனவே, 'ரோர் ஆஃப் தி லயன்' எனும் ஆவணப் படத்தையும், வுமன்'ஸ் டே அவுட் என்ற புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு குறும்படத்தையும் தோனி என்டர்டெய்ன்மெண்ட் தயாரித்திருக்கிறது. தோனி என்டர்டெய்ன்மெண்ட் தயாரிக்கும் முதல் தமிழ் படத்தை ரமேஷ் தமிழ்மணி இயக்குகிறார். மேலும் இப்படத்தில் பணியாற்றும் நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் குழுவினர் பற்றிய விவரங்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட உள்ளது. இது குறித்து இயக்குனர் ரமேஷ் தமிழ்மணி பேசுகையில், 'சாக்‌ஷி தோனி எழுதிய கதையின் கருவைப் படிக்கும்போதே இதன் தனித்துவத்தை என்னால் உணரமுடிந்தது. புத்தம் புதிதாய் இருந்த இந்த கதை குடும்பங்களை மகிழ்வூட்டி, சிரிக்கவைத்து சிந்திக்கவைக்கும் என்று நம்பினேன். இந்தக் கருவைத் திரைக்கதையாக்கி திரைப்படமாக்கும் வாய்ப்பை அவர் எனக்கு வழங்கியதைப் பெருமையாகக் கருதுகிறேன் என்று கூறியுள்ளார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து