முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருப்பதியில் இலவச தரிசனத்தில் செல்லும் பக்தர்களுக்கு நாளை முதல் நேரம் ஒதுக்கீடு: தேவஸ்தானம் தகவல்

ஞாயிற்றுக்கிழமை, 30 அக்டோபர் 2022      ஆன்மிகம்
thirupathy

Source: provided

திருப்பதி ; திருப்பதியில் இலவச தரிசனத்தில் செல்லும் பக்தர்களுக்கு நாளை முதல் நேரம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என தேவஸ்தான முதன்மை செயல் அலுவலர் தெரிவித்தார். 

திருப்பதியில் கடந்த ஏப்ரல் மாதம் 12-ம் தேதி முதல் இலவச தரிசனத்தில் செல்லும் சாதாரணப் பக்தர்களுக்கு தேதி, நேரம் குறிப்பிடப்பட்ட டைம் ஸ்லாட் டோக்கன்கள் வழங்கும் முறை நிறுத்தப்பட்டது. இது குறித்து திருப்பதி தேவஸ்தான முதன்மைச் செயல் அலுவலர் ஏ.வி. தர்மா ரெட்டி நிருபர்களிடம் கூறியதாவது, 

கடந்த அறங்காவலர் குழு கூட்டத்தின் போது, பக்தர்களுக்கு மீண்டும் டைம் ஸ்லாட் டோக்கன்கள் வழங்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி நவம்பர் மாதம் 1-ம் தேதியில் இருந்து மீண்டும் டைம் ஸ்லாட் டோக்கன்கள் வழங்கப்பட உள்ளது. அந்த டோக்கன்கள் அலிபிரியில் உள்ள பூதேவி காம்ப்ளக்ஸ், திருப்பதியில் உள்ள சீனிவாசம் தங்கும் விடுதி, திருப்பதி ரயில் நிலையம் அருகில் உள்ள கோவிந்தராஜசாமி சத்திரம்-2 ஆகிய இடங்களில் வழங்கப்பட உள்ளன. அதற்காக, அனைத்து வசதிகளுடன் கூடிய கவுண்ட்டர்கள் அமைக்கப்பட்டுள்ளன. 

வாரத்தில் சனி, ஞாயிறு, திங்கள் மற்றும் புதன் கிழமைகளில் 20 ஆயிரம் முதல் 25 ஆயிரம் டோக்கன்கள் வழங்கப்படும். செவ்வாய், வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் 15 ஆயிரம் டோக்கன்கள் மட்டுமே வழங்கப்படும். மேலும் சாதாரணப் பக்தர்கள் வைகுண்டம் கியூ காம்ப்ளக்சில் காத்திருப்பதைத் தவிர்க்க வி.ஐ.பி. தரிசன நேரத்தை டிசம்பர் 1-ம் தேதியில் இருந்து காலை 8 மணியாக மாற்றப்பட உள்ளது என்று அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து