முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நேபாளத்தில் தொடர் நிலநடுக்கம்: இடிபாடுகளில் சிக்கி 6 பேர் பலி

புதன்கிழமை, 9 நவம்பர் 2022      உலகம்
Nepal 2022-11-09

Source: provided

காத்மண்டு : நேபாளத்தில் அதிகாலையில் நிகழ்ந்த சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் இடிபாடுகளில் சிக்கி இதுவரை 6 பேர் உயிரிழந்துள்ளனர். 

நேபாள  நாட்டின் தலைநகர் காத்மாண்டுவில் நேற்று அதிகாலை 1.57 மணி அளவில் திடீரென்று நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவு கோலில் 6.3ஆக பதிவாகியுள்ளது. இந்த  நிலநடுக்கம் 10 கிலோ மீட்டர் ஆழத்தில் மையம் கொண்டிருந்ததாக தேசிய நிலநடுக்க அறிவியல் மையம் தெரிவித்துள்ளது.  இந்த நிலநடுக்கத்தின் போது இடிபாடுகளில் சிக்கி இதுவரை 6 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. 

முன்னதாக நேற்று முன்தினம் காலை 4.5 அளவில் நேபாள நாட்டில் நிலநடுக்கம் உணரப்பட்டது. இந்த நிலநடுக்கத்தால் தலைநகர் டெல்லி மற்றும் சுற்றுவட்டார பகுதிகள் பாதிக்கப்பட்டன. இரவு பணியில் ஈடுபட்டிருந்த தனியார் நிறுவன ஊழியர்கள் நில அதிர்வை உணர்ந்ததால் கட்டிடங்களை விட்டு வெளியேறி வீதிகளில் தஞ்சம் அடைந்தனர்.  நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்பு விவரங்கள் பற்றி உடனடியாக எந்த தகவலும் வெளிவரவில்லை. 

இதற்கு முன்பு அக்டோபர் 19-ம் தேதி காத்மாண்டுவில் ரிக்டர் அளவில் 5.1 அளவில் நிலநடுக்கம் உணரப்பட்டது., அந்த நிலநடுக்கம் 10 கிலோ மீட்டர் ஆழத்தில் மையம் கொண்டிருந்தது. ஜூலை 31-ம் தேதி காத்மாண்டுவில் இருந்து தென் கிழக்கே 147 கிலோ மீட்டர் தொலைவில் ரிக்டரில் 6.0 அளவிலான நிலநடுக்கம் உணரப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து