முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சீன அதிபருடன் வரும் 14-ம் தேதி ஜோபைடன் பேச்சுவார்த்தை: வெள்ளை மாளிகை அறிவிப்பு

வெள்ளிக்கிழமை, 11 நவம்பர் 2022      உலகம்
Joe-Biden-2022-11-11

இந்தோனேஷியாவில் நடைபெற உள்ள ஜி-20 உச்சி மாநாட்டின் போது அமெரிக்க அதிபர் ஜோ பைடன், சீன அதிபர் ஜி ஜின்பிங்கை வரும் 14-ம் தேதி சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.  

இந்தோனேஷியாவின் பாலி நகரத்தில் வரும் 14-ம் தேதி ஜி-20 உச்சி மாநாடு நடைபெற உள்ளது. 2 நாட்கள் நடைபெறும் மாநாட்டில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன், சீன அதிபர் ஜி ஜின்பிங் உள்பட ஜி-20 நாடுகளின் தலைவர்கள் கலந்து கொள்கின்றனர். இந்த மாநாட்டிற்கிடையே சீன அதிபரை ஜோ பைடன் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துவார் என்று அமெரிக்கா அறிவித்துள்ளது.

இது தொடர்பாக வெள்ளை மாளிகை செய்தி தொடர்பாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது, 

வரும் 14-ம் தேதி ஜோ பைடன், ஜி ஜின்பிங் பேச்சுவார்த்தை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தைவான் மீது சீனா ஆதிக்கம் செலுத்துவது தொடர்பாக அமெரிக்கா, சீனா இடையே மோதல் போக்கு ஏற்பட்டிருக்கும் நிலையில் இந்த பேச்சுவார்த்தை முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. வர்த்தக தொடர்புகள், நாடு கடந்த சவால்களில் இணைந்து செயல்படுவது மற்றும் நாடுகளிடையே உறவுகளை வலுப்படுத்துவது குறித்து இரு தலைவர்களும் பேசுவார்கள் என்று வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து