முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜி20 மாநாட்டில் சுவாரஸ்யம்: பிரதமர் மோடிக்கு சல்யூட் அடித்த அமெரிக்க அதிபர் ஜோ பைடன்..!

புதன்கிழமை, 16 நவம்பர் 2022      உலகம்
Modi 2022-11-16

ஜி-20 மாநாட்டின் நிறைவு நாளான நேற்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் சல்யூட் அடித்த நிலையில் இருக்கையில் அமர்ந்தபடியே பிரதமர் மோடி ஹாய் சொன்ன சுவாரசிய சம்பவம் அரங்கேறி உள்ளது.

இந்தோனேசியாவின் பாலி நகரில் ஜி-20 உச்சி மாநாடு நேற்று முன்தினம் தொடங்கியது. 2 நாட்கள் நடைபெறும் இந்த உச்சி மாநாட்டில் பங்கேற்க பிரதமர் நரேந்திர மோடி டெல்லியில் இருந்து கடந்த 3 நாட்களுக்கு முன் புறப்பட்டு பாலி நகருக்கு சென்றார். இதேபோன்று, மாநாட்டில் பங்கேற்க சீனா, கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, ஆஸ்திரேலியா, அமெரிக்கா உள்ளிட்ட ஜி-20 அமைப்பில் உறுப்பினர்களாக உள்ள ஆசிய, ஐரோப்பிய நாடுகளை சேர்ந்த பல்வேறு தலைவர்களும் சென்றனர். இதன்பின், பாலி நகரில் உள்ள அபூர்வா கெம்பிஸ்னிகி ஓட்டலில் ஜி-20 மாநாடு தொடங்கியது. வந்திருந்த தலைவர்களை இந்தோனேசிய அதிபர் ஜோகோ விடோடோ முறைப்படி வரவேற்றார். பிரதமர் மோடி உள்பட தலைவர்கள் பலரும் மாநாட்டில் உரையாற்றினர்.

இந்நிலையில் நேற்று 2வது நாள் ஜி20 மாநாடு துவங்க உள்ளது. இந்த வேளையில் உலக தலைவர்கள் அனைவரும் பாலிநகரில் உள்ள மாங்குரோவ் காட்டுக்கு விசிட் செய்தனர். அப்போது ஒவ்வொரு தலைவர்கள் இருக்கைகளில் அமர்ந்து இருந்தனர். பிரதமர் நரேந்திர மோடியும் இருக்கையில் அமர்ந்து இன்னொருவருடன் பேசி கொண்டிருந்தார்.

அப்போது அமெரிக்க அதிபர் ஜோ பைடன் நடந்து வந்தார். பிரதமர் நரேந்திர மோடியை பார்த்த ஜோ பைடன் புன்னகைத்தார். மேலும் நடந்து வந்தபடியே அமெரிக்க அதிபர் ஜோபைடன் பிரதமர் நரேந்திர மோடிக்கு வணக்கம்' கூறும் வகையில் சல்யூட் செய்தார். இதை பார்த்த பிரதமர் நரேந்திர மோடியும் கேசுவலாக அமர்ந்திருந்த இருக்கையில் உட்கார்ந்தபடியே கையை உயர்த்தி ஹாய்' என சொன்னார். தற்போது இது தொடர்பான படம் இணையதளத்தில் வெளியாகி வேகமாக பரவி வருகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து