முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆயிரக்கணக்கான ஆப்கன் அகதிகளை கட்டாயமாக வெளியேற்றும் துருக்கி: சர்வதேச சட்டங்கள் மீறப்படுவதாக புகார்

சனிக்கிழமை, 19 நவம்பர் 2022      உலகம்
Afghanistan 2022-11-19

துருக்கி அரசு தன் நாட்டின் எல்லைக்குள் இருந்து ஆயிரக்கணக்கான ஆப்கானிஸ்தான் அகதிகளை திருப்பி அனுப்பி வருகிறது என்று சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. 

துருக்கியில் உள்ள ஆப்கானிஸ்தான் அகதிகள் சர்வதேச பாதுகாப்பிற்காக பதிவு செய்வதிலிருந்து தடுக்கப்படுவதாகவும் மனித உரிமைகள் கண்காணிப்பகம் கண்டறிந்துள்ளது. நடப்பாண்டில் முதல் எட்டு மாதங்களில் இதுவரை 44,768 ஆப்கானிஸ்தான் அகதிகளை துருக்கி விமானம் மூலம் அனுப்பியது. தலிபான்கள் ஆப்கானிஸ்தானில் ஆட்சிக்கு வந்ததும் இந்த நடவடிக்கை வேகமெடுத்துள்ளது என்று மனித உரிமைகள் அமைப்பின் 73 பக்க அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இது சர்வதேச அகதிகள் சட்டங்கள் மற்றும் மரபுகளை மீறுவதாக சர்வதேச உறவு நிபுணர் நசீர் அஹமட் தரேக்கி தெரிவித்துள்ளார்.

துருக்கியில் இருந்து சமீபத்தில் நாடு கடத்தப்பட்ட ஆப்கானியர்கள் சிலர், துருக்கிய போலீசாரால் தாங்கள் தவறாக நடத்தப்பட்டதாக குற்றம் சாட்டியுள்ளனர். நாங்கள் பிழைப்புக்காக துருக்கி சென்றோம், ஆனால் திரும்பி நாடு கடத்தப்படுவதை நாங்கள் விரும்பவில்லை என்று அவர்கள் தெரிவித்துள்ளனர்.   . 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து