முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பயங்கரவாதத்திற்கு எதிரான போரில் ஒவ்வொரு நாடும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் - அமித்ஷா

சனிக்கிழமை, 19 நவம்பர் 2022      இந்தியா
Amit-Shah 2022-11-09

Source: provided

புதுடெல்லி : பயங்கரவாதத்திற்கு எதிரான போரில் ஒவ்வொரு நாடும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார். சில நாடுகள் பயங்கரவாதிகளுக்கு ஆதரவும், நிதியும் அளிப்பதுடன், அவர்களுக்கு புகலிடம் அளிக்கிறது என்றும் அவர் தெரிவித்தார்.

பயங்கரவாதத்துக்கு நிதி கிடைப்பதை தடுப்பது குறித்து விவாதிக்கும் சர்வதேச அளவிலான 2 நாள் மாநாடு மத்திய உள்துறை அமைச்சகம் ஏற்பாடு செய்தது. நேற்று முன்தினம் தொடங்கிய மாநாடு நேற்று நிறைவு பெற்றது. இந்த மாநாட்டில் நிறைவுரையாற்றிய அமித்ஷா பேசியதாவது:

ஜனநாயகம், மனித உரிமைகள், பொருளாதார வளர்ச்சி மற்றும் உலக அமைதிக்கு பயங்கரவாதம் மிகப்பெரிய அச்சுறுத்தலாக உள்ளது அதனை வெற்றி பெற அனுமதிக்கக்கூடாது. சமீபத்தில், சமூக செயல்பாடுகள் என்ற போர்வையில், இளைஞர்களை பயங்கரவாதிகளாக மாற்றவும், பயங்கரவாதத்தை நோக்கி தள்ளவும் செய்யும் அமைப்பு ஒன்றை மத்திய அரசு தடை செய்துள்ளது. இத்தகைய அமைப்புகளை, ஒவ்வொரு நாடும் அடையாளம் கண்டு அவற்றிற்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சில நாடுகள் பயங்கரவாதிகளுக்கு ஆதரவும், நிதியும் அளிப்பதுடன், அவர்களுக்கு புகலிடம் அளிக்கிறது. பயங்கரவாதிகளுக்கு எந்த சர்வதேச எல்லையும் கிடையாது. எனவே, ஒவ்வொரு நாடும் , அரசியலை ஒதுக்கி வைத்து விட்டு பயங்கரவாதத்திற்கு எதிரான போரில் ஒவ்வொரு நாடும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து