முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஐதராபாத் ; உக்ரைன் போரால் உணவு மற்றும் எரிசக்தி நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ் தெரிவித்தார்.

ஞாயிற்றுக்கிழமை, 20 நவம்பர் 2022      இந்தியா
Shaktikanta-Das 2022-11-19

Source: provided

ரிசர்வ் வங்கியின் பொருளாதாரம் மற்றும் கொள்கை ஆய்வுத்துறையின் வருடாந்திர ஆய்வு மாநாடு ஐதராபாத்தில் நடக்கிறது. இதை ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ் தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் அவர் பேசும் போது கூறியதாவது:- 

கொரோனா முதல் அலை காலத்தில் தரவுகளை திரட்டுவதும், தரவுகளில் தொடர்புடைய புள்ளிவிவர இடைவெளியும் முதலாவது மிகப்பெரிய சவாலாக இருந்தது. இரண்டாவது அலையின் போது, இலக்கு கொள்கை தலையீடுகளை வடிவமைப்பதற்கு துறை அளவிலான அழுத்தம் பற்றிய தகவல்களை சேகரிப்பது இன்னும் முக்கியமானதாக இருந்தது. கொரோனா 3-வது அலை இருந்த போதும் ஏற்கனவே சரிவடைந்த பொருளாதாரம் இயல்பு நிலைக்கு திரும்பும் நேரத்தில் ஏற்பட்ட உக்ரைன் போர் புதிய சவால்களை கொண்டு வந்தது. 

ஒரு கடினமான உணவு மற்றும் எரிசக்தி நெருக்கடியை உலகம் திடீரென எதிர்கொண்டது. இது முக்கியமான பொருட்களுக்கான எந்த ஒரு மூலத்தையும் சார்ந்திருப்பதைக் குறைக்க வேண்டியதன் அவசியத்தை முன்னுக்குக் கொண்டு வந்தது. பொருட்களின் விலை வானளவு உயர்ந்ததுடன், வினியோக சங்கிலியிலும் பெரும் பாதிப்பு ஏற்பட்டது. இந்த காரணிகள் பணவீக்கத்தின் உலகமயமாக்கலுக்கு வழிவகுத்தன. 

 கொரோனா, ஐரோப்பாவில் போர் மற்றும் நாடுகளின் பணவியல் கொள்கையின் தீவிரமான இறுக்கம் ஆகிய 3 அதிர்ச்சிகளின் பின்விளைவுகள் இன்னும் வெளிவருகின்றன. இதனால் தொடர்ந்து விழிப்புடன் இருக்க வேண்டும். எனவே ரிசர்வ் வங்கியின் ஆராய்ச்சி செயல்பாடு கடந்த காலத்தில் இருந்தது போல இந்த சாத்தியக்கூறுகளை எதிர்கொள்ள தயாராக இருக்க வேண்டும். இவ்வாறு சக்திகாந்த தாஸ் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து