முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

vயாத்திரைக்கு இடையே புல்லெட் ஓட்டிய ராகுல்

ஞாயிற்றுக்கிழமை, 27 நவம்பர் 2022      இந்தியா
Rahul 2022-11-27

Source: provided

 இந்தூர் ; மத்திய பிரதேசத்தில் நேற்று பாத யாத்திரைக்கு இடையே ராகுல் காந்தி  புல்லெட் பைக்கை ஓட்டினார்.

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரையிலான பாதயாத்திரையை கடந்த செப்டம்பர் 7-ம் தேதி முதல் நடத்தி வருகிறார். மத்திய பிரதேசத்தில் கடந்த 23-ம் தேதி முதல் நடந்து வரும் ராகுல் காந்தியின் பாதயாத்திரை நேற்று முன்தினம் 4-வது நாளாக தொடர்ந்தது. இதில் அவரது சகோதரியும், கட்சியின் பொதுச்செயலாளருமான பிரியங்கா, தனது கணவர் மற்றும் மகனுடன் கலந்து கொண்டார். 

மத்திய பிரதேசத்தில் நேறு 5-ராகுல் காந்தி பாத யாத்திரை மேற்கொண்டார். மோவ் பகுதியில் இருந்து நேற்று காலை ராகுல் காந்தியின் பாத யாத்திரை தொடங்கியது. பாத யாத்திரைக்கு இடையே ராகுல் காந்தி  புல்லெட் பைக்கை ஓட்டினார். ஹெல்மட் அணிந்த படி ராகுல் காந்தி சிறிது தூரம் பைக் ஓட்டிச் சென்றார். ராகுல் காந்தி பைக் ஓட்டிச்சென்றதை அங்கிருந்த காங்கிரஸ் தொண்டர்கள் உற்சாகம் அடைந்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony
View all comments

வாசகர் கருத்து