முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சார்லி ஹீரோவாக நடிக்கும் பைண்டர்

திங்கட்கிழமை, 28 நவம்பர் 2022      சினிமா
Binder 2022-11-28

Source: provided

Arabi production சார்பில் ரஜீஃப் சுப்பிரமணியம் மற்றும் Viyan ventures சார்பில் வினோத் ராஜேந்திரன் இணைந்து தயாரிக்க, உண்மை சம்பவத்தின் அடிப்படையில் உருவாகும் பரபரப்பான திரில்லர் படம் பைண்டர். இப்படத்தின் பூஜை நேற்று சென்னை பிரசாத் லேபில் நடைபெற்றது. வினோத் ராஜேந்திரன் இயக்கும்  இப்படத்தில் சார்லி கதையின் திருப்புமுனை பாத்திரத்தில் நடிக்கிறார். மேலும் செண்ட்ராயன், அபிலாஷ், கோபிநாத், சங்கர் நடிகை தாரணி, பிரானா ஆகியோர் இணைந்து நடிக்கவுள்ளனர். அமெரிக்க சிறைகளில் நிரபராதிகள் தண்டிக்கப்பட்டு வெளியே வரும் போது அரசாங்கம் தரும் இழப்பீட்டு தொகையை பெற்றுத்தரும் நிறுவனத்தைப் பற்றிய உண்மை சம்பவத்தின் அடிப்படையில், இப்படம் உருவாக உள்ளதாக இயக்குனர் வினோத் ராஜேந்திரன் தெரிவித்தார். இப்படத்தின் படப்பிடிப்பை  சென்னை மற்றும் இராம்நாடு பகுதிகளில் இரண்டு கட்டமாக நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony
View all comments

வாசகர் கருத்து