முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ரொனால்டோவை திட்டியதால் சர்ச்சை

திங்கட்கிழமை, 5 டிசம்பர் 2022      விளையாட்டு
Ronaldo 2021 12-05

Source: provided

போர்ச்சுகல் அணியின் நட்சத்திர வீரர் கிறிஸ்டியானா ரொனால்டோவை தென் கொரிய கால்பந்து வீரர் திட்டியதால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்ற லீக் ஆட்டத்தில் போர்ச்சுகல் 2-1 என்ற கணக்கில் தென்கொரியாவை வென்றது. இந்த போட்டியின்போது 45 நிமிடங்களுக்கு பிறகு அளிக்கப்பட்ட ஓய்வு சமயத்தில் ரொனால்டோவை தென்கொரிய வீரர் ஒருவர் திட்டியதாக போர்ச்சுகல் அணியின் பயிற்சியாளர் பெர்னாண்டோ சாண்டஸ் புகார் அளித்துள்ளார். இது சர்ச்சையை எழுப்பியுள்ளது.

ரொனால்டோவை பார்த்து அந்த தென் கொரிய வீரர் சீக்கிரம் போ என கோபத்தில் சத்தமிட்டதாகத் தெரிகிறது. இதுகுறித்து செய்தியாளர் சந்திப்பின்போது ரொனால்டோ கூறும்போது, “நான் அவரை (தென் கொரிய வீரர்) அமைதியாக இருக்க சொன்னேன். எனக்கு கட்டளையிட அவருக்கு எந்த உரிமையும் இல்லை” என்றார். இந்த விவகாரம் சர்ச்சையை எழுப்பியுள்ளது.

________________

காயத்தால் பிரபல இங்கிலாந்து வீரர் இன்று நாடு திரும்புகிறார்

பிரபல இங்கிலாந்து வீரர் லியம் லிவிங்ஸ்டன், இங்கிலாந்து அணிக்காக 12 ஒருநாள், 29  டி20 ஆட்டங்களில் விளையாடியுள்ளார். 62 முதல்தர ஆட்டங்களில் விளையாடியுள்ள லிவிங்ஸ்டன், பாகிஸ்தானுக்கு எதிரான ராவல்பிண்டி டெஸ்டில் அறிமுகமானார். முதல் இன்னிங்ஸில் 9 ரன்களும் 2-வது இன்னிங்ஸில் 7 ரன்களும் எடுத்தார்.

2-வது நாளன்று பாகிஸ்தான் இன்னிங்ஸில் ஃபீல்டிங் செய்தபோது கால் முட்டியில் அவருக்குக் காயம் ஏற்பட்டது. இதனால் பாகிஸ்தான் இன்னிங்ஸ் முழுக்க அவர் ஃபீல்டிங் செய்ய வரவில்லை. இங்கிலாந்தின் 2-வது இன்னிங்ஸில் மிகுந்த சிரமத்துடன் ஓடி ரன்கள் எடுத்தார்.  இந்நிலையில் காயம் தீவிரமாக உள்ளதால் பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் தொடரிலிருந்து லிவிங்ஸ்டன் விலகியுள்ளார். இங்கிலாந்துக்கு இன்று திரும்பும் லிவிங்ஸ்டன் மருத்துவச் சிகிச்சை மேற்கொள்ளவுள்ளார். 

_______________

ராகுல், வாஷிங்டன் சுந்தர் குறித்து தினேஷ் கார்த்திக் கூறியது என்ன?

இந்தியா - வங்காளதேசம் இடையேயான முதல் ஒருநாள் போட்டி டாக்காவில் நடைபெற்றது. இந்த போட்டியில் கேஎல் ராகுல், வாஷிங்டன் சுந்தர் தவறவிட்ட கேட்ச் இந்திய அணியின் தோல்விக்கு வழிவகுத்துள்ளது. அடுத்தடுத்து 2 கேட்ச் வாய்ப்புகள் நழுவிய நிலையில் அதிரடியாக விளையாடிய ஹசன் வங்காளதேச வெற்றிக்கு வழிவகுத்தார். வங்காளதேசத்திற்கு எதிரான முதல் போட்டியில் தோல்வியடைந்த நிலையில் இந்திய அணி மீதும் கேப்டன் ரோகித் சர்மா மீதும் கேட்சை தவறவிட்ட கேஎல் ராகுல், கேட்ச் பிடிக்க முயற்சிக்காத வாஷிங்டன் சுந்தர் மீதும் சமூகவலைதளங்களில் ரசிகர்கள் கடும் விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர்.

இந்நிலையில், கேஎல் ராகுல், வாஷிங்டன் சுந்தர் தவறவிட்ட கேட்ச், இந்திய அணியின் தோல்வி குறித்து தினேஷ் கார்த்திக் கருத்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தினேஷ் கார்த்திக் கூறுகையில், வெளிப்படையாக கூறவேண்டுமானால் இறுதிகட்டத்தில் கேஎல் ராகுல் தவறவிட்ட கேட்ச், வாஷிங்டன் சுந்தர் கேட்ச் பிடிக்க முயற்சிக்கவில்லை. அவர் கேட்ச் பிடிக்க முயற்சிக்காதது ஏன் என்று தெரியவில்லை. லைட் வெளிச்சம் காரணமாக இருக்கலாம் எனக்கு தெரியவில்லை. ஆனால், அவர் பந்தை பார்த்திருந்தால் கேட்ச் பிடிக்க வந்திருக்க வேண்டும். அந்த கேள்விக்கு சுந்தர் தான் பதில் அளிக்கவேண்டும். ஒட்டுமொத்தமாக பீல்டிங் தரம் 50-50 (பாதிக்கு பாதி). பீல்டிங்கின் சிறந்த நாளும் அல்ல மோசமான நாளும் அல்ல. கடைசி நேரத்தில் அழுத்தம் காரணமாக நாம் சில பவுண்டரிகளையும் விட்டோம் என்று நான் நினைக்கிறேன்' என்றார்.

________________

ருதுராஜ் கெய்க்வாட்டுக்கு அணியில் இடம் கிடைப்பது கடினம்- அஸ்வின்

நடந்து முடிந்த விஜய் ஹசாரே கோப்பையில் 9 சதங்கள் அடித்து இந்திய கிரிக்கெட் ரசிகர்களை திரும்பி பார்க்கவைத்தார். ஆனாலும் அவர் இடம்பெற்ற மகாராஷ்டிரா அணி இறுதிப் போட்டியில் தோல்வி அடைந்து கோப்பை வெல்லும் வாய்ப்பை இழந்தது. மொத்தமாக 11 சதங்களை அடித்துள்ள அவர் விஜய் ஹசாரே கோப்பை வரலாற்றில் அதிக சதங்கள் அடித்த பேட்ஸ்மனாகவும் வரலாற்றுச் சாதனை படைத்துள்ளார். 

ஆனாலும் கடுமையான போட்டி நிறைந்த இந்திய அணியில் யாருக்கு பதில் ருதுராஜ் கைக்வாட் வாய்ப்பு பெறுவார் என்று தெரிவிக்கும் ரவிச்சந்திரன் அஷ்வின் அதன் காரணமாகவே தற்சமயத்தில் அவருக்கு வாய்ப்பு கிடைப்பது கடினம் என்று கூறியுள்ளார். இது பற்றி தனது யூடியூப் பக்கத்தில் அவர் பேசியது பின்வருமாறு. அவர் இந்தியாவைச் சேர்ந்தவர் என்றாலும் யாருக்கு பதில் அவருக்கு வாய்ப்பு கிடைக்கும்? யாருக்கு பதில் என்பதை விட அவர் யாருடன் போட்டி போடுகிறார் என்பதை பாருங்கள். ஷிகர் தவான், ரோஹித் சர்மா, சுப்மன் கில் இவர்களுடன் ரிஷப் பண்ட்டும் ஓப்பனிங்கில் களமிறங்குகிறார். மேலும் இந்தியா கிரிக்கெட் விளையாடுவதற்கு ஒரு மிகவும் கடினமான ஒரு நாடாகும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து