முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

குஜராத் முதல்வராக 12-ம் தேதி பூபேந்திர படேல் பதவியேற்கிறார்: விழாவில் பிரதமர் மோடி, அமித்ஷா பங்கேற்பு

வெள்ளிக்கிழமை, 9 டிசம்பர் 2022      இந்தியா
Bhupendra-Patel 2022 12 -09

குஜராத் முதல்வர் பூபேந்திர படேல் தனது ராஜினாமா கடிதத்தை அம்மாநில கவர்னரிடம் வழங்கினார். வரும் 12-ம் தேதி திங்கள்கிழமை நடைபெறும் விழாவில் பூபேந்திர படேல் மீண்டும் குஜராத் முதல்வராக பதவியேற்கிறார். இந்த விழாவில் பிரதமர் மோடி மற்றும் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.  

குஜராத் மாநிலத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தல் முடிவுகள் நேற்று முன்தினம் அறிவிக்கப்பட்டன. 182 உறுப்பினர்களைக் கொண்ட சட்டசபையில் பா.ஜ.க. 156 இடங்களைக் கைப்பற்றியது. குஜராத்தில் தொடர்ந்து ஏழாவது முறையாக பா.ஜ.க. ஆட்சிக்கு வருகிறது. 

கடந்த 2017-ல் 77 இடங்களை பெற்றிருந்த காங்கிரஸ் கட்சி,  தற்போது 17 இடங்களில்  மட்டுமே வென்றது. இதனிடையே குஜராத் மாநில தற்போதைய முதல்வர் பூபேந்திர படேல், மீண்டும் முதல்வராக தொடர்வார் என்றும், வரும் 12-ம் தேதி திங்கள்கிழமை முதல்வர் பதவியேற்பு விழா நடைபெறும் அறிவிக்கப்பட்டுள்ளது. பதவியேற்பு விழாவில் பிரதமர் மோடி மற்றும் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோர் கலந்து கொள்கின்றனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில் குஜராத்தில் புதிய ஆட்சி அமைக்கும் பொருட்டு முதல்வர் பூபேந்திர படேல் கவர்னர் ஆச்சார்யா தேவ்ரத்திடம் தனது ராஜினாமா கடிதத்தை அளித்தார். குஜராத் முதல்வராக பூபேந்திர படேல் ஏற்கனவே கடந்த 2021-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 13-ம் தேதி முதல் முறையாக பதவி ஏற்றார். தற்போது 2-வது முறையாக முதல்வராக பதவி ஏற்க உள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து