முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வங்கிக்கடன் மோசடி: வீடியோகான் குழும உரிமையாளர் கைது

திங்கட்கிழமை, 26 டிசம்பர் 2022      இந்தியா
Venugopal 2022-12-26

Source: provided

புதுடில்லி : ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கிக்கடன் மோசடி வழக்கில் ஏற்கனவே வங்கியின் முன்னாள் தலைமை செயல் அதிகாரி சந்தா கோச்சர் மற்றும் அவரது கணவர் தீபக் கோச்சாரை கைது செய்த சிபிஐ, நேற்று (டிச.,26) வீடியோகான் குழுமத்தின் உரிமையாளர் வேணுகோபால் தூத்தை கைது செய்தது.

ராஜஸ்தானின் ஜோத்பூரில் பிறந்த சந்தா கோச்சார், 61, நாட்டின் மிகப்பெரும் தனியார் வங்கிகளில் ஒன்றான, ஐ.சி.ஐ.சி.ஐ., வங்கியின் தலைமை செயல் அதிகாரியாக, 2009 முதல் 2018 வரை இருந்தார். அப்போது, அவர் அதிகார துஷ்பிரயோகத்தில் ஈடுபட்டு, 'வீடியோகான்' குழுமத்துக்கு விதிமுறைகளை மீறி 3,250 கோடி ரூபாய் கடன் வழங்கியதாக புகார் எழுந்தது.

இதில், தொழிலதிபரான அவரது கணவர் தீபக் கோச்சார் பலனடைந்ததாக புகார் எழுந்தது. இது தொடர்பாக, ஐ.சி.ஐ.சி.ஐ., வங்கி 2018ல் விசாரணை நடத்தியது. குற்றச்சாட்டு உறுதியானதை தொடர்ந்து சந்தா கோச்சார், 2018ல் பணிநீக்கம் செய்யப்பட்டார்.

இந்த முறைகேடு தொடர்பாக சந்தா கோச்சார் மற்றும் அவரது கணவர் தீபக் கோச்சார் உள்ளிட்டோர் மீது சி.பி.ஐ., மற்றும் அமலாக்கத் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இந்த விவகாரத்தில் இவர்களின் ரூ.78 கோடி மதிப்புள்ள சொத்துக்களை அமலாக்கத்துறை ஏற்கனவே முடக்கியுள்ளது.

இந்நிலையில், இந்த மோசடி தொடர்பான விசாரணைக்கு சிபிஐ சார்பில் சம்மன் அனுப்பியும் இருவரும் ஒத்துழைக்காததால், டிச.,24ல் கைது செய்யப்பட்டனர். இந்த நிலையில், இந்த வழக்கு தொடர்பாக வீடியோகான் குழுமத்தின் உரிமையாளர் வேணுகோபால் தூத்தை சிபிஐ கைது செய்தது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து