முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

74-வது குடியரசு தினம்: முதல்வர் மு.க. ஸ்டாலின் டுவிட்டர் பதிவு

வியாழக்கிழமை, 26 ஜனவரி 2023      தமிழகம்
Stalin 2020 07-18

நம்மைப் பிரிக்க முனையும் சமூகத் தீமைகளை ஒழிக்க உறுதியேற்போம் என்று குடியரசு தினத்தையொட்டி முதல்வர் மு.க. ஸ்டாலின் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். 

நாட்டின் 74-வது குடியரசு தினவிழா இந்தியா முழுவதும் நேற்று விமர்சையாக கொண்டாடப்பட்டது. தமிழ்நாட்டில் குடியரசு தின விழா ஒவ்வோர் ஆண்டும், சென்னை மெரினா கடற்கரை சாலையிலுள்ள காந்தி சிலை அருகில் நடைபெறுவது வழக்கம். தற்போது அந்தப் பகுதியில் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் பணிகள் நடைபெற்று வருவதால், குடியரசு தின விழா மெரினா கடற்கரை சாலையிலுள்ள உழைப்பாளர் சிலை அருகில் நேற்று நடைபெற்றது. 

இந்த விழாவில் தமிழ்நாட்டின் கவர்னர் ஆர்.என்.ரவி, முதல்வர்  மு.க.ஸ்டாலின் மற்றும் உயரதிகாரிகள் கலந்து கொண்டனர். பின்னர், அங்கிருந்த கம்பத்தில் தேசியக்கொடியை கவர்னர் ஆர்.என். ரவி ஏற்றி வைத்தார்.  அப்போது அந்தப் பகுதியில் இந்திய விமானப்படை ஹெலிகாப்டர் பறந்து வந்து மலர் தூவியது

இந்த நிலையில் குடியரசு தினத்தையொட்டி முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது, 

இந்தியாவின் 74-வது குடியரசு நாளைக் கொண்டாடும் இவ்வேளையில், உலகின் மாபெரும் மக்களாட்சியாக நமக்கு மரியாதையை பெற்றுத் தந்துள்ள மாண்புகளைக் காப்போம். வேற்றுமைகளும் அனைவரையும் உள்ளடக்கிய தன்மையும்தான் இந்தியாவின் மிகப் பெரும் வலிமைகள். அவற்றைப் போற்றவும், நம்மைப் பிரிக்க முனையும் சமூகத் தீமைகளை ஒழிக்கவும் உறுதியேற்போம். இவ்வாறு அந்த பதிவில் முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து