முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

விஜய் சேதுபதி சந்தீப் கிஷன் இணையும் மைக்கேல்

திங்கட்கிழமை, 30 ஜனவரி 2023      சினிமா
Michael 2023 01 30

Source: provided

Karan C Productions LLP & Sree Venkateswara Cinemas LLP நிறுவனங்களின் தயாரிப்பில், ரஞ்சித் ஜெயக்கொடி இயக்கத்தில், விஜய் சேதுபதி சந்தீப் கிஷன் இணைந்து நடித்திருக்கும் படம் மைக்கேல்.  இப்படம் விரைவில் வெளியாகவுள்ளதை அடுத்து படக்குழுவினர் பத்திரிக்கையாளர்களைச் சமீபத்தில் சந்தித்தனர். அப்போது பேசிய இயக்குநர் ரஞ்சித் ஜெயக்கொடி, விஜய் சேதுபதி என் மீது அதிகமான அன்பு வைத்துள்ள, நல்ல நண்பர்.  இந்த படத்தில்  ஒரு கேமியோ கதபாத்திரத்தில் நடிக்க எல்லா மொழிகளுக்கும் தெரிந்த ஒரு நடிகர் தேவைப்பட்டார். நான் விஜய் சேதுபதியிடம் கேட்ட போது, அவர் உடனே ஒத்துக்கொண்டார்.  கௌதம் மேனனும் கதையைக் கேட்டு எங்களை முழுமையாக நம்பினார். மைக்கேல் திரைப்படம் நன்றாக வந்துள்ளது. உங்கள் அனைவருக்குப் படம் பிடிக்கும் என்று நம்புகிறோம். நாயகன் சந்தீப் கிஷன் பேசுகையில், நட்புக்காக லோகேஷ் இந்த படத்திற்குள் வந்தார். படத்தைப் பார்த்தார், அவருக்குப் படம் பிடித்து இருந்தது. அவரது வாழ்த்தினைத் தெரிவித்தார் என்றார். பிப்ரவரி 3 ஆம் தேதி உலகமெங்கும் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் இப்படம் வெளியாகவுள்ளது. சண்முகா சினிமாஸ் நிறுவனம் தமிழகமெங்கும் இப்படத்தை வெளியிடுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony
View all comments

வாசகர் கருத்து