முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

2007 டி20 உலகக் கோப்பை ஹீரோ ஜோகிந்தர் ஓய்வு

வெள்ளிக்கிழமை, 3 பெப்ரவரி 2023      விளையாட்டு
Joginder 2023 02 03

Source: provided

கடந்த 2007-ல் நடைபெற்ற டி20 உலகக் கோப்பை தொடரை வென்ற இந்திய அணியில் விளையாடிய பந்து வீச்சாளர் ஜோகிந்தர் சர்மா, அனைத்து பார்மெட் கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். 2007 டி20 உலகக் கோப்பையின் இறுதிப் போட்டியில் அவர் வீசிய அந்த கடைசி ஓவர் ஒவ்வொரு இந்திய கிரிக்கெட் ரசிகர் நெஞ்சிலும் மறக்க முடியாத தருணமாக என்றென்றும் இருக்கும்.

கடைசி ஓவரில் பாகிஸ்தான் அணியின் வெற்றிக்கு 13 ரன்கள் தேவைப்பட்டது. அப்போது ஓவரை வீசும் பொறுப்பை கேப்டன் டோனி, ஜோகிந்தர் சர்மா வசம் ஒப்படைத்தார். Wide வீசி ஓவரை துவங்கினார். இரண்டாவது பந்தில் மிஸ்பா-உல்-ஹக் சிக்ஸர் விளாசி இருந்தார். மூன்றாவது பந்தில் ஸ்கூப் ஆடி பைன்-லெக் திசையில் கேட்ச் ஸ்ரீசாந்த் வசம் கேட்ச் கொடுத்து அவுட் ஆகியிருப்பார் மிஸ்பா. அதன் மூலம் இந்திய அணி 5 ரன்கள் வித்தியாசத்தில் உலகக் கோப்பையை வென்று அசத்தி இருக்கும். அதன் மூலம் ஜோகிந்தர் சர்மா பிரபலமானார். 

________________

சி.எஸ்.கே. ஆல்ரவுண்டர்: டெஸ்ட் அணியில் சேர்ப்பு

ஐபிஎல் 2023 போட்டிக்கான வீரர்கள் ஏலத்தில் நியூசிலாந்து ஆல்ரவுண்டர் கைல் ஜேமிசனை ரூ. 1 கோடிக்குத் தேர்வு செய்தது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. (2021-ல் ஆர்சிபி அணி, ரூ. 15 கோடிக்கு ஜேமிசனைத் தேர்வு செய்தது.) கடந்த வருடம் ஜூன் மாதம் இங்கிலாந்துச் சுற்றுப்பயணத்தின்போது ஜேமிசனுக்கு முதுகில் காயம் ஏற்பட்டது. அன்று முதல் அவர் சர்வதேச ஆட்டங்கள் எதிலும் விளையாடவில்லை. இதனால் ஜேமிசனை ஐபிஎல் ஏலத்தில் தேர்வு செய்ய சிஎஸ்கேவைத் தவிர வேறு எந்த அணியும் ஆர்வம் செலுத்தவில்லை. 

காயத்திலிருந்து ஜேமிசன் மீண்டுவிட்டார், மீண்டும் விளையாட ஆர்வமாக உள்ளார் என்று பயிற்சியாளர் ஃபிளெமிங்கிடமிருந்து எங்களுக்குத் தகவல் வந்தது. அதனால் தேர்வு செய்தோம் என்று ஜேமிசனின் தேர்வு குறித்து விளக்கம் அளித்தார் சிஎஸ்கே தலைமைச் செயல் அதிகாரி காசி விஸ்வநாதன். ஜனவரி முதல் நியூசிலாந்தில் உள்ளூர் போட்டிகளில் விளையாடி வந்த ஜேமிசன், தற்போது சொந்த மண்ணில் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடருக்குத் தேர்வாகியுள்ளார். 

________________

பாக்., அணி பயிற்சியாளராக முன்னாள் வீரர் யாசித் அராபத்

பாகிஸ்தான் அணியின் இயக்குநராக மிக்கி ஆர்துர் விரைவில் நியமிக்கப்படவுள்ளார். அவர் அணியில் இல்லாதபோது தற்காலிகப் பயிற்சியாளராக யாசிர் அராஃபத் செயல்படுவார் எனத் தெரிகிறது. இங்கிலாந்தின் கவுன்டி அணி மற்றும் ஹாங்காங் அணி ஆகியவற்றின் பயிற்சியாளராக யாசிர் அராஃபத் பணியாற்றியுள்ளார். இங்கிலாந்தில் லெவல் 4 பயிற்சியாளர் பாடத்திட்டத்திலும் தேர்ச்சி பெற்றுள்ளார். 

டெர்பிஷைர் அணியில் மிக்கி ஆர்துர் பணியாற்றி வருவதால் பாகிஸ்தான் அணியின் முழு நேரப் பயிற்சியாளராகப் பணியாற்றக் கூடிய வாய்ப்பை மறுத்து விட்டார். இதையடுத்து பாகிஸ்தான் அணியின் இயக்குநராக நியமிக்கப்படவுள்ளார். ஒருநாள் உலகக் கோப்பை, பாகிஸ்தான் அணியின் ஆஸ்திரேலியச் சுற்றுப்பயணம் ஆகியவற்றில் பாகிஸ்தான் அணிக்கு உறுதுணையாக மிக்கி ஆர்துர் இருப்பார் என்று கூறப்படுகிறது. 

________________

வெஸ்ட் இண்டீஸ் - ஜிம்பாப்வே முதல் டெஸ்ட் இன்று தொடக்கம்

வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி ஜிம்பாப்வேயில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையேயான 2 டெஸ்ட் போட்டி தொடரில் முதல் டெஸ்ட் புலவாயோவில் இன்று (4-ந்தேதி) தொடங்குகிறது. பிராத்வெயிட் தலைமையிலான வெஸ்ட் இண்டீஸ் அணி வெற்றியுடன் கணக்கை தொடங்கும் ஆர்வத்தில் இருக்கிறது. 

அந்த அணி கடந்த டிசம்பரில் ஆஸ்திரேலிய மண்ணில் டெஸ்ட் தொடரை 0-2 என்ற கணக்கில் இழந்து இருந்தது. ஜிம்பாப்வே அணி கடைசியாக 2021-ம் ஆண்டு ஜூலை மாதம் சொந்த மண்ணில் வங்காளதேசத்திடம் தோல்வியை தழுவி இருந்நது. இரு அணிகளும் 10 டெஸ்டில் விளையாடி உள்ளன. இதில் வெஸ்ட்இண்டீஸ் 7-ல் வெற்றி பெற்றுள்ளது. 3 போட்டி டிரா ஆனது. ஜிம்பாப்வே முதல் முறையாக வெஸ்ட் இண்டீசை வீழ்த்தும் வேட்கையில் இருக்கிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து