முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பார்டர் - காவஸ்கர் கோப்பை தொடர் நாளை தொடக்கம்

செவ்வாய்க்கிழமை, 7 பெப்ரவரி 2023      விளையாட்டு
Border---Gavaskar 2023 02 0

Source: provided

புதுடெல்லி : இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோதும் பார்டர் - காவஸ்கர் கிரிக்கெட் தொடர், டெஸ்ட் ஆட்டத்துடன் வியாழக்கிழமை (பிப். 9) தொடங்கவுள்ளது.

அதிரடியாக ஆடக் கூடிய ரிஷப் பந்த், ஒரே செஷனில் ஆட்டத்தின் போக்கையே மாற்றும் தன்மை கொண்டவர். கார் விபத்து காரணமாக இந்தத் தொடரில் அவர் பங்கேற்க முடியாமல் போனது இந்தியாவுக்கு பின்னடைவாகவே இருக்கும் என நினைக்கிறோம். அந்த வகையில் இது ஆஸ்திரேலியாவுக்கு சாதகமானது. பௌலிங்கில் சாமர்த்தியமாகச் செயல்படும் அஸ்வின் எப்போதுமே ஒரு அச்சுறுத்தலாக இருக்கிறார். அவர் தனது திட்டத்தை செயல்படுத்த முடியாத வகையில் எங்கள் பேட்டர்கள் விளையாட வேண்டும்.

எங்கள் பௌலர்களில் நேதன் லயன் இந்திய வலது கை பேட்டர்களுக்கு எதிராக எவ்வாறு பந்துவீச இருக்கிறார் என்பதை எதிர்நோக்கியிருக்கிறோம். அவர் ஆதிக்கம் செலுத்தினால் ஆஸ்திரேலிய பேட்டர்கள் பணி சுலபமாகும். லோயர் ஆர்டரில் வரும் பேட்டரான ஆஷ்டன் அகரை, 2-ஆவது ஸ்பின்னர் வாய்ப்பாக பயன்படுத்தும் எண்ணம் இல்லை. விக்கெட்டுகள் எடுக்க வேண்டியது பௌலரின் பணியாகும். அதை அவரிடம் அளிப்பதை விரும்பவில்லை - இயான் சேப்பல் (முன்னாள் ஆஸி. கேப்டன்)

இந்தத் தொடரின் போக்கை தீர்மானிப்பதில் ரவிச்சந்திரன் அஸ்வின் முக்கியமானவர். பௌலிங்கில் திட்டமிட்டதை தகுந்த முறையில் செயல்படுத்தக் கூடிய அவர், ரன்கள் சேகரிப்பவராகவும் இருக்கிறார். இந்திய ஆடுகளங்களில் அவரது பௌலிங்கில் பந்து தக்க முறையில் சுழன்றுவிட்டாலே, பேட்டர்களுக்கு அது கடும் சவால். எனவே அவர் அதிகமாகத் திட்டமிட வேண்டிய தேவை இல்லை.

அணியின் 3-ஆவது ஸ்பின்னராக குல்தீப் யாதவை தேர்வு செய்யலாம். ஜடேஜா, அக்ஸருடன் ஒப்பிடுகையில் அவரின் பௌலிங் சற்று வித்தியாசமானது. இந்தியா டாஸ் தோற்கும் பட்சத்தில், முதல் நாளில் பௌலிங்கில் தாக்கத்தை ஏற்படுத்துபவராக குல்தீப் இருப்பார். பேட்டிங் வரிசையில் சூர்யகுமார் யாதவ், ஷுப்மன் கில் இருவரில் ஒருவரை பிளேயிங் லெவனில் விடுவதென்பது கடினமானது. ஆஸ்திரேலியாவுக்கு எதிராக கோலி சிறப்பாகவே விளையாடியிருப்பதால், அவருக்கு ஃபார்ம் அமையும் பட்சத்தில் ரன்கள் குவிப்பார். விக்கெட் கீப்பிங்கை பொருத்தவரை, பேட்டிங்கில் சிறந்த இஷான் கிஷணை தேர்வு செய்வதா, கீப்பிங்கில் சிறந்த கோனா பரத்தை சேர்ப்பதா என்பது கடினமான தேர்வு - ரவி சாஸ்திரி (முன்னாள் இந்திய பயிற்சியாளர்)

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony
View all comments

வாசகர் கருத்து