முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கனடாவில் ஆசிரியர்களை கத்தியால் குத்திய மாணவன்

புதன்கிழமை, 22 மார்ச் 2023      உலகம்
Canada 2023 03 22

Source: provided

நோவா : கனடாவின் நோவா ஸ்காட்டியா மாகாணம் ஹாலிபாக்ஸ் பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் ஒரு வகுப்பறையில் ஆசிரியர் பாடம் நடத்தி கொண்டிருந்தார். அப்போது மாணவன் ஒருவன் திடீரென தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து ஆசிரியரை குத்தினான். 

இதனால் பயந்து போன மாணவர்கள் கூச்சலிட்டு அங்கும், இங்குமாக ஓட ஆரம்பித்தனர். இதனையடுத்து அருகில் உள்ள வகுப்பறையில் இருந்த ஆசிரியர் வந்து மாணவனை தடுக்க முயன்றார். அப்போது அவரையும் அந்த மாணவன் கத்தியால் குத்தினான். 

மேலும் இந்த சம்பவத்தில் தாக்குதலில் ஈடுபட்ட மாணவனுக்கும் கத்திக்குத்து காயம் ஏற்பட்டது. இந்த சம்பவம் குறித்து தகவல் கிடைத்ததும் போலீசார் பள்ளிக்கூடத்துக்கு விரைந்தனர். அவர்கள் காயமடைந்த 3 பேரையும் மீட்டு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து