முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வைக்கம் நூற்றாண்டு விழாவை தொடங்கி வைக்க முதல்வர் ஸ்டாலினுக்கு அழைப்பு : கடிதம் அனுப்பினார் பினராய் விஜயன்

புதன்கிழமை, 22 மார்ச் 2023      தமிழகம்
CM-2 2023 03 22

Source: provided

சென்னை : ஏப். 1-ல் நடைபெறவுள்ள வைக்கம் நூற்றாண்டு விழாவை தொடங்கி வைக்க வேண்டும் என கோரி மு.க. ஸ்டாலினுக்கு  கேரள முதல்வர் பினராய் விஜயன் கடிதம் அனுப்பி உள்ளார். அந்த கடிதத்தினை கேரள மீன்வளத்துறை அமைச்சர் சாஜி செரியன் நேற்று முதல்வர் ஸ்டாலினிடம் வழங்கினார். 

சமூக நீதிக்காகவும், தீண்டாமைக்கு எதிராகவும் கேரளத்தில் நடைபெற்ற  மிக முக்கியமான போராட்டம் வைக்கம் போராட்டம் ஆகும். இங்குள்ள பிரசித்தி பெற்ற மகாதேவர் கோயில் மற்றும் அதன் சுற்றுப்புறப் பகுதிகளிலும் அன்றைக்கு தாழ்த்தப்பட்ட மற்றும் பிற்படுத்தப்பட்ட மக்கள் நுழைய அனுமதிக்கப்படவில்லை. 

இக்கொடுமைகளுக்கு எதிராக 1924-ம் ஆண்டு மார்ச் மாதம் 30-ம் நாள் நடைபெற்ற வைக்கம் போராட்டத்தில் திருவாளர்கள் டி.கெ. மாதவன், கே. கேளப்பன், மன்னத்து பத்மநாபன், கே. பி. கேசவ மேனோன் போன்றோர் முன்னின்று செயல்பட்டனர். 

மகாத்மா காந்தி இப்பகுதிக்கு நேரடியாக வந்து போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்ததும்,   பெரியார் வைக்கம் போராட்டத்தை முன்னின்று நடத்தியதும் வரலாற்று சிறப்புமிக்கதாகும்.  இதன் காரணமாக, தந்தைப் பெரியார் வைக்கம் வீரர் என அறியப்பட்டதும், வைக்கத்தில் அவரது நினைவாக சிலை எழுப்பப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

அமைதியான முறையில் 603 நாட்கள் தொடர்ந்து நடைபெற்ற வைக்கம் போராட்டம் 1925 நவம்பர் 23-ம் நாள் வெற்றிகரமாக முடிவுற்றது. வரலாற்றுச் சிறப்புமிக்க இப்போராட்டத்தின் நூற்றாண்டு விழாவினை வரும் ஏப்ரல் திங்கள் ஒன்றாம் நாள் (01.04.2023) முதல் 603 நாட்கள் மிகச்சிறப்பாக கொண்டாட கேரள அரசு முடிவு செய்துள்ளது.

வைக்கம் போராட்ட வெற்றிக்கு தமிழ்நாட்டின்  பங்களிப்பு மிகவும் குறிப்பிடத்தக்கது என்பதால்,  கேரள, தமிழ்நாடு மாநில முதல்வர்கள்  இணைந்து வைக்கத்தில் உள்ள தந்தை பெரியார் சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தி , வைக்கம் போராட்ட வீரர்களுக்கு புகழ் வணக்கம் செலுத்தி,  நூற்றாண்டு விழாவினை தொடங்கி வைத்திட வேண்டுமென கோரி முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு அழைப்பு விடுத்து கேரள மாநில முதல்வர் பினராய் விஜயன் எழுதியுள்ள கடிதத்தினை கேரள மீன்வளத்துறை அமைச்சர் சாஜி செரியன் நேற்று முதல்வர் ஸ்டாலினிடம் நேரில் வழங்கி நூற்றாண்டு விழாவில் கலந்து கொண்டு  சிறப்பித்திட கேட்டுக்கொண்டார்.  முதல்வர் மு.க. ஸ்டாலினும் இவ்விழாவில் கலந்து கொள்ள தனது இசைவினைத் தெரிவித்துள்ளார்.

 

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தொண்டை வலி குணமாக | தொண்டைகரகரப்பு நீங்க | தொண்டை கட்டு | குரல் கம்மல் | தொண்டை எரிச்சல் 1 week 1 day ago மலச்சிக்கல் குணமாக | ஜீரண சக்தி உண்டாக | மலக்கட்டு நீங்க - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 month 3 weeks ago சொறி, சிரங்கு, படை குணமாக | நரம்பு சிலந்தி | படர்தாமரை நீங்க | தோல் நோய் | குஷ்டம் குணமாக 2 months 13 hours ago
காய்ச்சல் குணமாக | மலேரியா காய்ச்சல் | டைபாய்டு காய்ச்சல் குணமாக | பித்த ஜுரம் | சளி காய்ச்சல் குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 15 hours ago பேதி நிற்க | சீதபேதி குணமாக | உஷ்ண பேதி | கழிச்சல் | இரத்த கழிச்சல் குணமாக 2 months 1 day ago கல்லடைப்பு தீர | சிறுநீரக கோளாறு நீங்க | சிறுநீரக கல் கரைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 1 day ago
View all comments

வாசகர் கருத்து