முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நாட்டிலேயே முதல் முறையாக ராஜஸ்தானில் சுகாதார உரிமை மசோதா நிறைவேற்றம்

வியாழக்கிழமை, 23 மார்ச் 2023      இந்தியா
Rajastha-2023-03-23

Source: provided

ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் நாட்டிலேயே முதல் முறையாக சுகாதார உரிமை மசோதாவை நிறைவேற்றி அனைவரையும் திரும்பி பார்க்க வைத்துள்ளது ராஜஸ்தான். 

நாட்டின் சுகாதார கட்டமைப்புகளை வலுப்படுத்த பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வந்தாலும் ஆம்புலன்ஸ் கூட பிடிக்க கூட வசதி இன்றி பல கிலோ மீட்டர் தூரம் கால்நடையாக தோல் மீது சுமந்து செல்லப்படும் உடல்கள். இதுபோன்ற நிகழ்வு இனி எங்கள் மாநிலங்களில் தொடரவே கூடாது என்பதில் உறுதியாக இருக்கும் ராஜஸ்தான் அரசு கொண்டு வந்துள்ள மசோதா தான் தற்போது நாட்டையே திரும்பி பார்க்க வைத்துள்ளது.

அனைவருக்கும் கல்வி என்பது போல அனைவருக்கும் சுகாதாரம் என்பது தான் இந்த திட்டத்தின் அடிப்படை நோக்கம். கடந்த 2018-ம் ஆண்டு காங்கிரஸ் அளித்திருந்த தேர்தல் வாக்குறுதிகளில் இதுவும் ஒன்று. இந்நிலையில் விரைவில் சட்டமன்ற தேர்தலை சந்திக்க இருக்கும் ராஜஸ்தானில் பாஜக-வின் எதிர்ப்பையும், தனியார் மருத்துவர்களின் எதிர்ப்பையும் மீறி இந்த மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது. இதன் மூலம் இனி அரசு மருத்துவமனை மட்டுமின்றி தனியார் மருத்துவமனைகள் மற்றும் கிளினிக்குகளில் அவசர சிகிச்சைக்கு முன்கூட்டியே பணம் செலுத்த வேண்டிய அவசியம் இல்லை.

சிகிச்சை பெற்ற நபரால் ஒருவேளை சிகிச்சைக்கான பணம் திருப்பி செலுத்த முடியாவிட்டால் அரசே அந்த பணத்தை செலுத்திவிடும். கடந்த செப்டம்பர் மாதமே இந்த மசோதாவை சட்டமன்றத்தில் நிறைவேற்ற அசோக் கெலாட் தமையிலான அரசு முயற்சித்தும் மசோதாவில் சில மாற்றங்களை கொண்டு வர வலியுறுத்தி பாஜக-வினர் போர்க்கொடி தூக்கினர். தனியார் மருத்துவமனைகள் கட்ட நிலம் வழங்கி இருப்பதை எண்ணி பார்க்க வேண்டும் என சுட்டிக்காட்டியுள்ளது ராஜஸ்தான் அரசு.

சிகிச்சை தரம் இருக்கும் தனியார் மருத்துவமனைகளிடம் அபராதம் வசூலிக்கப்படும் என்றும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அரசு தெரிவித்திருப்பதும் மருத்துவர்களின் போராட்டத்திற்கு காரணமாக இருக்கிறது. ஆனால், தற்போது அவசரமாக நிறைவேற்றப்பட்டுள்ள இந்த மசோதாவை செயல்படுத்துவது தொடர்பான விதிமுறைகள் என்னென்ன என்பது இனி தான் வகுக்கப்பட உள்ளன. ராஜஸ்தானின் இந்த மசோதா ஆளுநரின் ஒப்புதலுடன் சட்டமாக செயல்படுத்தப்படும் போது அது பல்வேறு மாநிலங்களுக்கு சிறந்ததொரு முன் உதாரணமாக திகழும் என்பதில் மாற்று கருத்தில்லை.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தொண்டை வலி குணமாக | தொண்டைகரகரப்பு நீங்க | தொண்டை கட்டு | குரல் கம்மல் | தொண்டை எரிச்சல் 1 week 1 day ago மலச்சிக்கல் குணமாக | ஜீரண சக்தி உண்டாக | மலக்கட்டு நீங்க - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 month 3 weeks ago சொறி, சிரங்கு, படை குணமாக | நரம்பு சிலந்தி | படர்தாமரை நீங்க | தோல் நோய் | குஷ்டம் குணமாக 2 months 13 hours ago
காய்ச்சல் குணமாக | மலேரியா காய்ச்சல் | டைபாய்டு காய்ச்சல் குணமாக | பித்த ஜுரம் | சளி காய்ச்சல் குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 15 hours ago பேதி நிற்க | சீதபேதி குணமாக | உஷ்ண பேதி | கழிச்சல் | இரத்த கழிச்சல் குணமாக 2 months 1 day ago கல்லடைப்பு தீர | சிறுநீரக கோளாறு நீங்க | சிறுநீரக கல் கரைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 1 day ago
View all comments

வாசகர் கருத்து