முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சூர்யகுமார் யாதவுக்கு ஆதரவாக யுவராஜ் டுவீட்

சனிக்கிழமை, 25 மார்ச் 2023      விளையாட்டு
Yuvraj-Singh 2023 03 25

Source: provided

அண்மையில் முடிந்த ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் மூன்று முறை முதல் பந்திலேயே ரன் ஏதும் எடுக்காமல் டக் அவுட்டாகி இருந்தார் சூர்யகுமார் யாதவ். இந்தச் சூழலில் யுவராஜ் அவருக்கு ஆதரவு கொடுத்துள்ளார். முதல் இரண்டு போட்டிகளில் ஸ்டார்க் வேகத்திலும், கடைசிப் போட்டியில் ஆஷ்டன் அகர் சுழலிலும் அவர் தனது விக்கெட்டை இழந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

இந்நிலையில், யுவராஜ் தனது ஆதரவை அவருக்கு கொடுத்துள்ளார். “ஒவ்வொரு விளையாட்டு வீரரும் தங்களது கரியரில் ஏற்ற, இறக்கங்களை எதிர்கொள்வர். நாம் அனைவருமே இதை ஏதேனும் ஒரு கட்டத்தில் எதிர்கொண்டு இருப்போம். சூர்யகுமார் யாதவ் இந்திய அணியில் மிக முக்கிய வீரர் என நான் நம்புகிறேன். உலகக் கோப்பையில் அவருக்கு வாய்ப்பு கிடைத்தால் முக்கிய பங்களிப்பை அவர் கொடுத்து அசத்துவார். நம் வீரர்களுக்கு நாம் துணை நிற்க வேண்டும். நம் சூர்யா நிச்சயம் எழுச்சி பெறுவார்” என யுவராஜ் அந்த ட்வீட்டில் தெரிவித்துள்ளார்.

________________

பிரிதிவி ஷா யார் என்பது இந்த ஐபிஎல்.லில் தெரியும்: பாண்டிங்

ஐபிஎல் 2023 தொடர் இந்த மாத இறுதியில் தொடங்குகின்றது. டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் தொடக்க வீரர் பிரிதிவி ஷா, ஏற்கெனவே டேவிட் வார்னருடன் சேர்ந்து சிலபல இன்னிங்ஸ்களை ஆடியுள்ளார். இதுவரை பிரிதிவி ஷா மொத்தம் 63 ஐபிஎல் போட்டிகளில் ஆடி 1588 ரன்களைத்தான் எடுத்துள்ளார். சராசரி 25 தான். 99 அதிகபட்ச ஸ்கோர். ஸ்ட்ரைக் ரேட் 147. 14 அரைசதங்களை அடித்துள்ளார். கடந்த ஐபிஎல் சீசனில் 10 போட்டிகளில் வெறும் 283 ரன்களையே எடுத்துள்ளார். 

இந்நிலையில் டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங் இவர் மீது அபரிமிதமான நம்பிக்கையை வைத்துள்ளார். அவர் கூறியதாவது: “முன்னெப்போதையும் விட பயிற்சியில் கடுமையாக உழைத்திருக்கிறார். சிறப்பாகவும் ஆடுகின்றார். இதற்கு முன்னால் பார்த்ததை விட அவரது உடல் வடிவமும் முன்பை விட நன்றாக உள்ளது. அன்றொரு நாள் அவரிடம் அவரது அணுகுமுறை பற்றி பேசினேன். ஒன்று மட்டும் புரிந்தது இந்த ஐபிஎல் சீசன் இவருக்கு பெரிதாக அமையும் என்றே கருதுகிறேன். அவரது திறமையை வைத்துப் பார்க்கும் போது உண்மையான பிரிதிவி ஷா-வை இந்த சீசனில் நீங்கள் காணலாம் என்று தெரிவித்துள்ளார். 

________________

ஆர்.சி.பி. அணியுடன் இணைந்தார் கோலி

இந்தாண்டுக்கான ஐபிஎல் தொடர் வருகிற 31-ந் தேதி கோலாகலமாக தொடங்குகிறது. இந்த தொடரின் முதல் போட்டியாக குஜராத் டைட்டன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதுகிறது. இந்த தொடருக்காக தற்போது அனைத்து அணிகளை சேர்ந்த வீரர்களும் தயாராகி வருகின்றனர். 

இந்தியா - ஆஸ்திரேலியா தொடர் முடிவடைந்த நிலையில் விராட் கோலி இன்று பெங்களூரு அணியுடன் இணைந்துள்ளார். இது தொடர்பான புகைப்படத்தை அணி நிர்வாகம் தனது அதிகாரபூர்வ டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது. இந்த புகைப்படத்தை ஆர்சிபி ரசிகர்கள் அதிகமாக ஷேர் செய்து வருகின்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தொண்டை வலி குணமாக | தொண்டைகரகரப்பு நீங்க | தொண்டை கட்டு | குரல் கம்மல் | தொண்டை எரிச்சல் 1 week 1 day ago மலச்சிக்கல் குணமாக | ஜீரண சக்தி உண்டாக | மலக்கட்டு நீங்க - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 month 3 weeks ago சொறி, சிரங்கு, படை குணமாக | நரம்பு சிலந்தி | படர்தாமரை நீங்க | தோல் நோய் | குஷ்டம் குணமாக 2 months 1 day ago
காய்ச்சல் குணமாக | மலேரியா காய்ச்சல் | டைபாய்டு காய்ச்சல் குணமாக | பித்த ஜுரம் | சளி காய்ச்சல் குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 1 day ago பேதி நிற்க | சீதபேதி குணமாக | உஷ்ண பேதி | கழிச்சல் | இரத்த கழிச்சல் குணமாக 2 months 1 day ago கல்லடைப்பு தீர | சிறுநீரக கோளாறு நீங்க | சிறுநீரக கல் கரைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 1 day ago
View all comments

வாசகர் கருத்து