முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

‘இந்தியன் 2’ படப்பிடிப்புக்காக தைவான் சென்றார் கமல்ஹாசன்

சனிக்கிழமை, 1 ஏப்ரல் 2023      சினிமா
Kamal 2023 04 01

‘இந்தியன் 2’ படப்பிடிப்புக்காக நடிகர் கமல்ஹாசன் தைவான் புறப்பட்டுச் சென்றுள்ளார். இது தொடர்பான புகைப்படம் வைரலாகி வருகிறது.

ஷங்கர் இயக்கத்தில் நடிகர் கமல்ஹாசன், ப்ரியா பவானி சங்கர், காஜல் அகர்வால், ரகுல் ப்ரீத் சிங், சித்தார்த், பாபி சிம்ஹா உள்ளிட்டப் பலர் நடிக்கும் திரைப்படம் ‘இந்தியன் 2’. இந்தப் படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் விறுவிறுப்பாக நடந்து வந்தது. சென்னை ஷெட்யூலை முடித்துவிட்டு படக்குழு தற்போது தைவான் கிளம்பியுள்ளது. இதற்காக ஏர்போர்ட்டில் இருந்தபடி நடிகர் கமல்ஹாசன் ‘இந்தியன் 2’ படத்திற்காக தைவான் புறப்படுகிறேன்’ என இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படத்தை பதிவிட்டுள்ளார்.

இந்தப் புகைப்படம் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. தைவானில் 4 நாட்கள் படப்பிடிப்பு நடக்க உள்ளதாக கூறப்படுகிறது. தொடர்ந்து பிரமாண்டமான ரயில் சண்டைக் காட்சிக்காக படக்குழு தென் ஆப்பிரிக்கா செல்ல இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளன. சமீபத்திய பேட்டி ஒன்றில் இயக்குநர் ஷங்கர் வருகிற ஜூன் மாதத்திற்குள் படப்பிடிப்பு முடிவடைந்து விடும் எனத் தெரிவித்துள்ளார். இதன்பிறகு, ஜூன் மாதத்திற்குப் பின் போஸ்ட் புரொடக்‌ஷன் ஆரம்பிக்கும் எனவும் தெரிவித்துள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தொண்டை வலி குணமாக | தொண்டைகரகரப்பு நீங்க | தொண்டை கட்டு | குரல் கம்மல் | தொண்டை எரிச்சல் 1 week 2 days ago மலச்சிக்கல் குணமாக | ஜீரண சக்தி உண்டாக | மலக்கட்டு நீங்க - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 month 4 weeks ago சொறி, சிரங்கு, படை குணமாக | நரம்பு சிலந்தி | படர்தாமரை நீங்க | தோல் நோய் | குஷ்டம் குணமாக 2 months 1 day ago
காய்ச்சல் குணமாக | மலேரியா காய்ச்சல் | டைபாய்டு காய்ச்சல் குணமாக | பித்த ஜுரம் | சளி காய்ச்சல் குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 1 day ago பேதி நிற்க | சீதபேதி குணமாக | உஷ்ண பேதி | கழிச்சல் | இரத்த கழிச்சல் குணமாக 2 months 1 day ago கல்லடைப்பு தீர | சிறுநீரக கோளாறு நீங்க | சிறுநீரக கல் கரைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 1 day ago
View all comments

வாசகர் கருத்து