முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆண்டுதோறும் போட்டித் தேர்வுகளை நடத்தி டி.என்.பி.எஸ்.சி. மூலம் காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும்: அரசுக்கு ஓ.பி.எஸ். கோரிக்கை

புதன்கிழமை, 31 மே 2023      தமிழகம்
OPS 2022 12 29

Source: provided

சென்னை : தமிழக அரசின் பல்வேறு பதவிகளுக்கான போட்டித் தேர்வினை இனி ஆண்டுதோறும் நடத்தி, உடனுக்குடன் முடிவுகளை வெளியிட்டு, காலியாக உள்ள அனைத்துப் பணியிடங்களையும் நிரப்ப முதல்வர் மு.க. ஸ்டாலின் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார். 

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, 

தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளபடி  தி.மு.க. ஆட்சிப் பொறுப்பேற்று இரண்டு ஆண்டுகள் கடந்துள்ள நிலையில் 10,000 காலிப் பணியிடங்கள் கூட நிரப்பப்படவில்லை. அரசுத் துறைகள், பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் காலியாக உள்ள பணியிடங்களை உடனுக்குடன் நிரப்ப வேண்டிய கடமையும், பொறுப்பும் அரசாங்கத்திற்கு உண்டு. அப்போதுதான் ஓர் அரசு திறம்பட செயல் முடியும். 

தி.மு.க-வின் தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றும் வகையிலும், இளைஞர்களின் எதிர்கால நலனை கருத்தில் கொண்டும்,  இனி வருங்காலங்களில் டி.என்.பி.எஸ்.சி. மூலம் ஒவ்வொரு ஆண்டும் பல்வேறு பதவிகளுக்கான போட்டித் தேர்வினை நடத்தி, உடனுக்குடன் முடிவுகளை வெளியிட்டு, காலியாக உள்ள அனைத்துப் பணியிடங்களை நிரப்ப முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று  வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அந்த அறிக்கையில் ஓ. பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து