முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இன்று வைகாசி விசாகம்: திருப்பரங்குன்றம் முருகப்பெருமானுக்கு குடம் குடமாக நடந்த பாலாபிஷேகம்

வெள்ளிக்கிழமை, 2 ஜூன் 2023      ஆன்மிகம்
Murugan-1 2023-06-02

Source: provided

மதுரை : வைகாசி விசாகத்தையொட்டி நேற்று திருப்பரங்குன்றம் முருகப் பெருமானுக்கு குடம் குடமாக பாலாபிஷேகம் நடந்தது. 

முருகப்பெருமானின் முதல்படை வீடான திருப்பரங்குன்றம் கோவிலில் கொண்டாடப்படும் விழாக்களில் வைகாசி விசாக பெருவிழா முக்கியமானதாகும். இந்த ஆண்டுக்கான விசாக திருவிழா, கடந்த மே 24-ம் தேதி காப்புக் கட்டுதலுடன் தொடங்கியது. 

விழாவினை முன்னிட்டு தினமும் இரவு 7 மணிக்கு புஷ்ப அங்கி அலங்காரத்தில் முருகன்-தெய்வானையுடன் உற்சவர் சன்னதியில் இருந்து கோவில் வளாகத்தில் அமைந்துள்ள வசந்த மண்டபத்திற்கு வந்து அங்கு நீர் நிரப்ப்பட்ட தொட்டியின் மீது அமைக்கப்பட்டிருக்கும் ஊஞ்சலில் எழுந்தருளினார். 

9-ம் நாளான நேற்று முன்தினம் வசந்த உற்சவத்தின் நிறைவு விழா நடைபெற்றது. 10-ம் நாளான நேற்று வைகாசி விசாகத்தையொட்டி அதிகாலை முதலே கோவிலில் பக்தர்கள் கூட்டம் அதிகரித்தது. காலை 5 மணிக்கு சண்முகர் சன்னதியில் உள்ள சண்முகர், வள்ளி, தெய்வானைக்கு சிறப்பு அபிஷேகமும், பாலாபிஷேகமும் நடைபெற்றது. 

6 மணிக்கு கம்பத்தடி மண்டபத்தில் உள்ள விசாக கொறடு மண்டபத்தில் சண்முகர், வள்ளி-தெய்வானையுடன் எழுந்தருளினர். அங்கு காலை முதல் மாலை வரை, பக்தர்கள் கொண்டுவந்த பாலில் சண்முகருக்கு குடம் குடமாக பாலாபிஷேகம் நடந்தது. பின்னர் பால் காவடி, பன்னீர் காவடி, இளநீர் காவடி, புஷ்ப காவடி எடுத்தும், அலகு குத்தியும் பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர். 

வைகாசி விசாகத்தையொட்டி மதுரை மற்றும் பல்வேறு பகுதியில் இருந்தும் பாத யாத்திரையாக வந்திருந்த பக்தர்கள் திருப்பரங்குன்றம் ரத வீதிகளில் குவிந்து அரோகரா கோஷம் எழுப்பினர். பல மணி நேரம் நீண்ட வரிசையில் காத்திருந்து அவர்கள் சாமி தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை கோவில் துணை ஆணையர் சுரேஷ் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்திருந்தனர். 

வைகாசி விசாகத்தையொட்டி பக்தர்களின் வசதிக்காக இந்த ஆண்டு அதிக அளவு வெயில் தாக்கத்தை கருத்தில் கொண்டு கோவில் நிர்வாகம் சார்பில் திருப்பரங்குன்றம் சன்னதி தெரு மற்றும் கோவில் வாசல் பகுதியில் முழுவதும் தேங்காய் நார் விரிப்புகள் போடப்பட்டிருந்தது. 

மேலும் கோவில் நிர்வாகம் சார்பில் கோவிலுக்குள் பால்குடம் எடுத்து வரும் பக்தர்களுக்கு தனி வரிசை, சுவாமி தரிசனம் செய்ய வருபவர்களுக்கு தனி வரிசை என இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு பக்தர்கள் தரிசனத்துக்கு அனுப்பப்பட்டனர். கோவிலுக்குள் கூடுதலாக மின் விசிறி மற்றும் ஏர்கூலர் வசதிகள் செய்யப்பட்டிருந்தது. மேலும் அதிகாலை 6 மணி முதல் 10 ஆயிரம் பக்தர்களுக்கு கோவில் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 1 week 5 days ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 month 1 week ago தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 1 month 1 week ago
மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 2 months 4 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 4 days ago இரத்தத்தை சுத்தம் செய்து சுறுசுறுப்பாக்க - சித்த மருத்துவ குறிப்புக்கள் | இரத்தம் சுத்தமாக | ரத்த சோகை | புதிய ரத்தம் உருவாக | இரத்தத்தை சுத்தப்படுத்த 2 months 4 days ago
View all comments

வாசகர் கருத்து