முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கத்திக்குத்து தாக்குதல் பற்றி புத்தகம் எழுதும் சல்மான் ருஷ்டி

சனிக்கிழமை, 3 ஜூன் 2023      உலகம்
Salman-Rushdie 2023-06-03

Source: provided

வாஷிங்டன் : தன் மீதான கத்திக்குத்து தாக்குதல் சம்பவம் பற்றி புத்தகம் எழுதப் போவதாக சல்மான் ருஷ்டி அறிவித்துள்ளார்.

இந்தியாவில் பிறந்த பிரபல எழுத்தாளர் சல்மான் ருஷ்டி 1988-ம் ஆண்டு எழுதிய தி சாத்தானிக் வெர்சஸ் என்ற புத்தகம் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனால் அவருக்கு கொலை மிரட்டல்கள் விடுக்கப்பட்டன. இதற்கிடையே கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் அமெரிக்காவின் நியூயார்க்கில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற சல்மான் ருஷ்டி மீது வாலிபர் ஒரு கத்தியால் சரமாரியாக குத்தினார். 

இந்த தாக்குதலில் அவர் ஒரு கண் பார்வையை இழந்தார். இந்த சம்பவத்துக்கு பிறகு முதல் முறையாக சல்மான் ருஷ்டி கடந்த 20-ம் தேதி நியூயார்க்கில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்றார். இந்த நிலையில் தன் மீதான கத்திகுத்து தாக்குதல் சம்பவம் பற்றி புத்தகம் எழுத போவதாக சல்மான் ருஷ்டி அறிவித்துள்ளார். 

இது தொடர்பாக அவர் கூறியதாவது:- என் மீதான தாக்குதல், என்ன நடந்தது மற்றும் அதன் அர்த்தம் என்ன, தாக்குதல் பற்றி மட்டுமின்றி அதை சுற்றியும் நடந்தது பற்றியும் ஒரு புத்தகத்தை எழுத முயற்சிக்கிறேன். 

இது ஒரு சிறிய புத்தகம். இது உலகில் எழுதுவதற்கு எளிதான புத்தகம் அல்ல. ஆனால் வேறு விஷயத்தை செய்ய நான் இதை கடந்து செல்ல வேண்டி உள்ளது என்று தெரிவித்தார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து