முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆஸ்திரேலிய வீரர்களுக்கு இந்திய பவுலர்கள் அச்சுறுத்தலாக இருப்பார்கள் - மார்னஸ் லபுஷேன் கணிப்பு

ஞாயிற்றுக்கிழமை, 4 ஜூன் 2023      விளையாட்டு
Marnus-Labuschen 2023-06-04

Source: provided

லண்டன் : உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியின்போது ஆஸ்திரேலிய வீரர்களுக்கு இந்திய பவுலர்கள் அச்சுறுத்தலாக இருப்பார்கள் என்று ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி வீரர் மார்னஸ் லபுஷேன் தெரிவித்தார்.
இந்தியா, ஆஸ்திரேலிய அணிகள் மோதும் உலக கிரிக்கெட் டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டி வரும் 7-ம் தேதி தொடங்கி 11-ம் தேதி நிறைவடையவுள்ளது. இந்த போட்டி லண்டனில் உள்ள ஓவல் மைதானத்தில் நடைபெறுகிறது.
இந்த போட்டி குறித்து ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் மார்னஸ் லபுஷேன் கூறியதாவது:
நான் அணியில் 3-வது வீரராக களமிறங்கி விளையாடி வருகிறேன். என்னால் முடிந்த அளவு அதிக ஆட்டங்களில் ரன்களை குவிப்பதற்கும் பங்களிப்பதற்கும் பல வழிகளைக் கண்டறிய வேண்டும்.
இங்கிலாந்து மைதானம் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு சாதகமாக இருக்கும் என்பதால் இந்திய அணியில் மொகமது ஷமி, மொகமது சிராஜ், உமேஷ் யாதவ் ஆகியோரை தேர்வு செய்துள்ளது. ஓவல் மைதானத்தில் இந்திய பந்து வீச்சாளர்கள், ஆஸ்திரேலிய வீரர்களுக்கு சவாலாகவும், அச்சுறுத்தலாகவும் இருப்பார்கள். நாங்கள் இந்திய அணிக்கு எதிராக பார்டர் கவாஸ்கர் கோப்பையில் விளையாடினோம். அவர்கள் எப்படி விளையாடுவார்கள் எப்படி பந்து வீசுவார்கள் என்பது குறித்த நுணுக்கங்களை கற்று வைத்துள்ளோம். இந்திய பவுலர்களை சமாளிக்கும் வியூகங்களை நாங்கள் வகுத்துள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து