முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மணிப்பூரில் தொடரும் கலவரம்: 3 பேர் உயிரோடு எரிப்பு

புதன்கிழமை, 7 ஜூன் 2023      இந்தியா
manipur-2023-05-04

Source: provided

இம்பால் : மணிப்பூரில் மீண்டும் கலவரக்காரர்களால் 3 பேர் உயிரோடு எரிக்கப்பட்ட சம்பவம் அரங்கேறியுள்ளது.

மணிப்பூரில் பெரும்பான்மையாக உள்ள மைதேயி சமூகத்தினர் தங்களுக்கு பழங்குடியின அந்தஸ்து வழங்க வேண்டும் என்று கோரி வருகிறார்கள். இதற்கு நாகர் மற்றும் குகி சமூகத்தார் அடங்கிய சிறுபான்மை பழங்குடியின சமூகத்தினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்கள். இது தொடர்பாக மணிப்பூரின் பல்வேறு மாவட்டங்களில் மைத்தேயி மற்றும் பழங்குடிகளுக்கு இடையே மோதல் ஏற்பட்டது. கடந்த மாதம் 3-ந் தேதி முதல் கலவரம் ஏற்பட்டது. கலவரத்தில் 100-க்கும் மேற்பட்டோர் பலியானார்கள். 310 பேர் காயம் அடைந்தனர்.

அங்கு மீண்டும் இயல்பு நிலை திரும்ப ராணுவம் மற்றும் துணை ராணுவ படை வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளனர். மணிப்பூரில் அமைதியை ஏற்படுத்தும் வகையில் மத்திய உள்துறை மந்திரி அமித் ஷா அங்கு சென்றார். ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் நீதி விசாரணை நடத்தப்படும் என்று அவர் அறிவித்தார்.

இதற்கிடையே குகி தீவிரவாதிகள் நேற்று முன்தினம் அதிகாலை நடத்திய துப்பாக்கி சூட்டில் எல்லை பாதுகாப்பு படை வீரர் ரஞ்சித் யாதவ் கொல்லப்பட்டார். அசாம் ரைபிள்ஸ் துணை ராணுவ படையின் 2 வீரர்கள் காயம் அடைந்தனர். இந்த நிலையில் மணிப்பூரில் தாய், மகன் உள்பட 3 பேர் உயிருடன் எரித்து கொல்லப்பட்டனர்.

குண்டு காயம் அடைந்த 8 வயது பழங்குடியின சிறுவன், அவரது தாயார் மற்றும் இன்னொரு உறவினர் ஆகிய 3 பேர் ஆம்புலன்சில் சென்று கொண்டு இருந்தனர். போலீஸ் பாதுகாப்புடன் தான் அந்த ஆம்புலன்ஸ் சென்றது. மேற்கு இம்பால் நோக்கி ஆம்புலன்ஸ் சென்றது. மிகப்பெரிய கும்பல் ஆம்புலன்சை வழி மறித்து அவர்களை யார் என்று விசாரித்த அந்த கும்பல் ஆம்புலன்சோடு தீ வைத்தது. இதில் 3 பேரும் உடல் கருகி பரிதாபமாக இறந்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து