முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஊட்டி மலை ரெயில் தடம் புரண்டு விபத்து

வியாழக்கிழமை, 8 ஜூன் 2023      தமிழகம்
Ooty-Train-Accident 2023-06-08

Source: provided

நீலகிரி: குன்னூரிலிருந்து மேட்டுப்பாளையம் சென்ற மலை ரயிலின் ஒரு பெட்டி தடம் புரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. எனினும், எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. குன்னூர் - மேட்டுப்பாளையம் இடையே ரயில் சேவை ரத்து செய்யப்பட்டது.

கோடை சீசன் காரணமாக நீலகிரி மாவட்டத்துக்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்துள்ளனர். இவர்கள் நீலகிரி மலை ரயிலில் பயணிக்க ஆர்வம் காட்டுகின்றனர். இதனால், மலை ரயிலில் இடம் கிடைப்பது பெரும் சிரமமாக உள்ளது. இந்நிலையில், கோடை சீசன் முடிவடைந்த நிலையிலும், பள்ளிகள் திறப்பு ஒத்தி வைக்கப்பட்டுள்ளதால் சுற்றுலா பயணிகள் கூட்டம் குறையவில்லை. நீலகிரிக்கு சுற்றுலா வரும் பலரும் மலை ரயில் பயணிக்கவே ஆர்வம் காட்டுகின்றனர்.

இந்த மலை ரயிலில் நேற்று முன்தினம் தமிழ்நாடு கவர்னர் ஆர்.என்.ரவி குடும்பத்தினருடன் பயணம் செய்து மகிழ்ந்தார். இந்நிலையில், குன்னூரிலிருந்து மேட்டுப்பாளையத்துக்கு வியாழக்கிழமை மதியம் 3 மணியளவில் நீலகிரி மலை ரயில் புறப்பட்டது.

ரயில் குன்னூர் ரயில் நிலையத்திலிருந்து புறப்பட்டு சில மீட்டர் தூரம் சென்றதும் ரயிலின் கடைசி பெட்டி தடம் புரண்டது. இதனால், ரயில் முன் நோக்கி செல்லாமல் நின்றது. ரயிலை நிறுத்திய ரயில்வே ஊழியர்கள், ரயிலை ஆய்வு செய்தபோது, மலை ரயிலின் கடைசிப் பெட்டியின் சக்கரங்கள் தண்டவாளத்தில் இருந்து இறங்கியது தெரியவந்தது. இதனால், குன்னூரிலிருந்து மேட்டுப்பாளையத்துக்கான ரயில் சேவை ரத்து செய்யப்பட்டது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து