முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

செயற்கை நுண்ணறிவால் இந்திய தொழில்நுட்ப சூழல் மேம்படும்: பிரதமர் நரேந்திரமோடி பெருமிதம்

வெள்ளிக்கிழமை, 9 ஜூன் 2023      இந்தியா
MODI 2023 06 09

புதுடெல்லி, இந்தியாவில் தொழில்நுட்ப சூழலை மேம்படுத்த செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மிகப்பெரிய பங்களிப்பை அளிக்கும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் மிக முக்கிய பங்காற்றி வரும் அமெரிக்க நிறுவனமான ஓபன் ஏஐ (OpenAI) நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான சாம் ஆல்ட்மேன், பிரதமர் நரேந்திர மோடியை நேற்று சந்தித்தார். சந்திப்பு குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்த சாம் ஆல்ட்மேன், "இந்தியாவில் ஏற்பட்டுள்ள தகவல் தொழில்நுட்ப முன்னேற்றம் குறித்தும், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மூலம் இந்தியா எவ்வாறு பயனடைந்து வருகிறது என்பது குறித்தும் பிரதமர் நரேந்திர மோடியுடன் மேற்கொண்ட உரையாடல் மிகச்சிறப்பாக இருந்தது. பிரதமர் அலுவலக அதிகாரிகளுடனான ஒவ்வொரு சந்திப்பும் மகிழ்ச்சிகரமானதாக இருந்தது" எனத் தெரிவித்திருந்தார்.

சாம் ஆல்ட்மேனின் பதிவுக்கு பதில் அளித்துள்ள பிரதமர் மோடி, "ஆழமான உரையாடலுக்காக உங்களுக்கு நன்றி. இந்தியாவின் தொழில்நுட்பத்தை மேம்படுத்துவதில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மிகப் பெரிய பங்களிப்பை அளிக்க முடியும். குறிப்பாக இளைஞர்கள் மத்தியில். எங்கள் மக்களுக்கு அதிகாரம் அளிப்பதற்காக, தொழில்நுட்ப மாற்றத்தை விரைவுபடுத்தக்கூடிய அனைத்து ஒத்துழைப்புகளையும் வரவேற்கிறோம்" எனத் தெரிவித்துள்ளார்.

உலகை ஆச்சரியத்தில் ஆழ்த்தி வரும் சேட்ஜிபிடி எனும் செயலியை உருவாக்கிய நிறுவனம்தான் ஓபன் ஏஐ. இதோடு, ஜிபிடி-4, டால்-இ, ஓபன்ஏஐ-5, ஓபன்ஏஐ கோடெக்ஸ் போன்ற தொழில்நுட்பங்களையும் இந்நிறுவனம் உருவாக்கி இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 5 days 17 hours ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 month 1 day ago தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 1 month 1 day ago
மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 1 month 3 weeks ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 month 3 weeks ago இரத்தத்தை சுத்தம் செய்து சுறுசுறுப்பாக்க - சித்த மருத்துவ குறிப்புக்கள் | இரத்தம் சுத்தமாக | ரத்த சோகை | புதிய ரத்தம் உருவாக | இரத்தத்தை சுத்தப்படுத்த 1 month 4 weeks ago
View all comments

வாசகர் கருத்து